மாரி செல்வராஜை கோடீஸ்வரன் ஆக்கிய வாழை... ஒரே படத்தில் இத்தனை கோடி லாபமா?

First Published | Aug 28, 2024, 8:34 AM IST

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாகி உள்ள வாழை திரைப்படம் எத்தனை கோடி லாபம் பார்த்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Mari Selvaraj Vaazhai Movie Profit details gan
Vaazhai

கோலிவுட்டில் தோல்வியே சந்திக்காத இயக்குனர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய மூன்று படங்களும் தொடர்ச்சியாக ஹிட் அடித்த நிலையில், அவரின் நான்காவது படமான வாழை கடந்த ஆகஸ்ட் 23-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து வாழை படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ்.

Mari Selvaraj Vaazhai Movie Profit details gan
Vaazhai Movie

வாழை திரைப்படம் முதலில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக தயாரிக்கப்பட்டது. இப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முனைப்போடு தான் எடுத்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் தியேட்டர் ரிலீஸுக்கு மாற்றப்பட்டது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழ்நாடு முழுவதும் அப்படத்தை ரிலீஸ் செய்து இருந்தது. வாழை திரைப்படம் தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்... கொட்டுக்காளியை தியேட்டரில் வெளியிட்டது தவறு - சிவகார்த்திகேயனை நேரடியாக விமர்சித்த அமீர்! ஏன்?


Vaazhai movie Mari Selvaraj

வாழை திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் 5 நாட்களிலேயே ரூ.15 கோடி வசூலித்துவிட்டது. மிகவும் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது லாபத்தை அள்ளி வருகிறது. இப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே 5 கோடி தானாம். அதுவும் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா தான் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும்.

Vaazhai Movie Profit

தியேட்டர் வெளியீட்டிலேயே ரூ.10 கோடிக்கு மேல் லாபம் ஈட்டிய இப்படம், ஓடிடி மற்றும் இதர சாட்டிலைட் உரிமைகள், ஆடியோ உரிமைகள் உள்ளிட்டவை மூலமும் ரூ.10 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறதாம். இதன்மூலம் 5 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்ட வாழை திரைப்படம் தற்போது 20 கோடி லாபம் ஈட்டி கொடுத்திருக்கிறது. இன்னும் தியேட்டர்களில் வாழை படம் வெற்றிநடை போட்டு வருவதால் அதன் லாபம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஷிவானி... பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா?

Latest Videos

click me!