தொடர்ச்சியாக தமிழில் "களவாணி மாப்பிள்ளை" மற்றும் "புர்கா" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மிர்னா மேனன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இந்த சூழலில் தான் கடந்த 2023ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "ஜெயிலர்" திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.