அப்புறம் எல்லாரும் ரெடியா? கூலி பட அதிகாரப்பூர்வ அப்டேட்ஸ் - ஆட்டத்தை துவங்கும் லோகேஷ்!

First Published | Aug 27, 2024, 11:01 PM IST

Coolie Update : நாளை மாலை 6 மணி முதல் கூலி திரைப்படத்தின் அப்டேட்களை வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

Leo Movie

"லியோ" திரைப்பட மெகா ஹிட் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தனது அடுத்த திரைப்படம் தான் "கூலி". தளபதி விஜய், உலக நாயகன் கமல்ஹாசனை தொடர்ந்து இந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். லியோ திரைப்படம் வெளியான சில மாதங்கள் கழித்து இந்த ஆண்டு துவக்கத்தில் கூலி திரைப்பட பணிகளை அவர் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

தாய்மையால் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கை பாதிக்கப்பட்டதா?

Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ஆண்டு, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து அசத்தி வருவது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு தனது இமயமலை பயணத்தை மேற்கொண்ட ரஜினிகாந்த், பல அரசியல் தலைவர்களை சந்தித்து உரையாடினார். பிறகு அமீரகம் சென்ற அவருக்கு கோல்டன் விசா அளித்த கௌரவித்தது அமீரக அரசு.

Tap to resize

TG Gnanavel

ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் நடிகர் மணிகண்டனை வைத்து "ஜெய் பீம்" என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், தனது "வேட்டையன்" பட பணிகளை கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய ரஜினிகாந்த், இந்த ஆண்டு முதல் பாதியிலேயே அந்த பட பணிகளை முழுமையாக முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Coolie Movie Update

இந்நிலையில் இப்பொது லோகேஷ் கனகராஜின் "கூலி" பட பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் அந்த பட பணிகளையும் முடிக்கவுள்ளார். இந்த சூழலில், நாளை மாலை 6 மணி முதல், கூலி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

MS Bhaskar Daughter : எம்.எஸ். பாஸ்கர் வீட்டில் விஷேஷம்.. மகள் சொன்ன இனிப்பான செய்தி - குவியும் வாழ்த்துக்கள்!

Latest Videos

click me!