MS Bhaskar Daughter : எம்.எஸ். பாஸ்கர் வீட்டில் விஷேஷம்.. மகள் சொன்ன இனிப்பான செய்தி - குவியும் வாழ்த்துக்கள்!

First Published | Aug 27, 2024, 10:00 PM IST

M.S Bhaskar : பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு வெகு விமர்சையாக வளைகாப்பு விழா நடைபெற்று முடிந்துள்ளது.

MS Bhaskar Family

தமிழ் திரையுலகில் சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசி புகழ் பெற்றவர் தான் ஹேமாமாலினி. அவருடைய உடன் பிறந்த சகோதரர் தான் எம் எஸ் பாஸ்கர். திரையுலகில் இவரும் டப்பிங் கலைஞராகத் தான் தனது கலை பயணத்தை தொடங்கினார். தொடக்கத்தில் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில், பல சின்னத்திரை நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற எம்.எஸ் பாஸ்கரின் "பட்டாபி" (சின்ன பாப்பா பெரிய பாப்பா நாடகம்) என்கின்ற கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாகும்.

சினிமாவில் களமிறங்கும் தனுஷின் வாரிசு.. NEEK பட முதல் சிங்கிளில் உள்ள சூப்பர் சர்ப்ரைஸ்!

Actress Ishwarya Bhaskar

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பயணித்து வரும் எம்.எஸ் பாஸ்கருக்கு இரு குழந்தைகள் உண்டு. மூத்தவர் ஐஸ்வர்யா பாஸ்கர் மற்றும் இளைய மகன் ஆதித்யா பாஸ்கர். இவர்கள் இருவருமே இப்போது திரை துறையில் சிறந்த நடிகர்களாக பயணித்த வருகின்றனர். மேலும் தந்தை மற்றும் பெரியம்மாவை போல ஐஸ்வர்யா பாஸ்கரும் டப்பிங் கலைஞராகவும் திரையுலகில் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Ishwarya Bhaskar

இந்நிலையில் கர்பமாக உள்ள ஐஸ்வர்யா பாஸ்கருக்கு வளைகாப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றுள்ளது. இதில் அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியோடு பங்கேற்று, ஐஸ்வர்யா பாஸ்கரை வாழ்த்தி அவருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்து அந்த அழகிய தருணத்தை கொண்டாடியுள்ளனர்.

Adithiya Bhaskar

இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான நடிகர் சந்தானத்தின் "வடக்குப்பட்டி ராமசாமி" முதல், அண்மையில் வெளியான நடிகை கீர்த்தி சுரேஷின் "ரகு தாத்தா" திரைப்படம் வரை பல சூப்பர்ஹிட் படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் நடிகர் எம்.எஸ். பாஸ்கர்.

7 வருட கஷ்டம்! ஒரே நாளில் ட்ராப்பான 'சேது' படம்.. முதல் ஹீரோ யார் தெரியுமா? அமீர் கூறிய தகவல்!

Latest Videos

click me!