சொந்தமாக தனி தீவு... கோடி கோடியா சொத்து... மகாராணி போல வாழ வாழும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

First Published | Aug 27, 2024, 8:44 PM IST

jacqueline fernandez net worth : இந்திய நடிகைகளில் ஒருவர் தனி தீவையே சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது பலருக்குப் தெரிந்திருக்காது. அவர் யார்? அந்தத் தீவு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

Jacqueline Fernandez Private Island

இந்திய நடிகைகளில் ஒருவர் தனி தீவையே சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது பலருக்குப் தெரிந்திருக்காது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அலியா பட், கத்ரீனா கைஃப், சமந்தா, கரீனா கபூர் போன்ற எந்த நடிகையும் இப்படி ஒரு தீவுக்கு ராணியாக மாறவில்லை.

Jacqueline Fernandez Private Island

தனித் தீவு ராணியாக வலம்வரும் அந்த நடிகை 8 ஆண்டுகளாக பாலிவுட்டில் ஒரு ஹிட் கூட கொடுக்காத நடிகை என்பது இன்னும் ஆச்சரியாக இருக்கும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் நடிக்கும் அவர் இலங்கையைச் சேர்ந்த ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான்.

Tap to resize

Jacqueline Fernandez Private Island

ஜாக்குலின் இப்போது முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இல்லை. முன்பு, மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2, கிக் என தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்தவர்தான் இவர். அப்போது முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இருந்தார். கடைசியாக ஜாக்குலின் நடிப்பில் வெற்றி பெற்ற படம் 2016 இல் வெளியான ஹவுஸ்ஃபுல் 3 தான்.

Jacqueline Fernandez Private Island

2011 முதல் 14 வரை ஜாக்குலின் தான் பாலிவுட்டில் முதலிடத்தில் இருந்தார். தொடர் வெற்றிகள் கிடைத்த அந்த காலத்தில் தான் 2012ஆம் ஆண்டு ஜாக்குலின் தனது சொந்த நாடான இலங்கையில் ஒரு தனி தீவை வாங்கினார்.

Jacqueline Fernandez Private Island

2012இல் தீவை வாங்கி, அங்கு ஒரு ஆடம்பரமான வில்லாவைக் கட்ட திட்டமிட்டார். அந்த தீவை தனது ரகசிய வசிப்பிடமாகப் பயன்படுத்த விரும்புனாரா அல்லது குத்தகைக்கு எடுத்தாரா பற்றி உறுதியான தகவல் இல்லை. மர்டர் 2 மற்றும் ஹவுஸ்ஃபுல் 2 வெற்றிகளுக்குப் பிறகு,, ரேஸ் 2 படத்தில் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு இந்தத் தீவை வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jacqueline Fernandez Private Island

ஜாக்குலின் 600 ஆயிரம் டாலர்கள் (2012இல் இதன் மதிப்பு ரூ.3 கோடி மேல்) விலை கொடுத்து தீவை தன்வசப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதன் பிறகு அந்தத் தீவை என்ன செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Jacqueline Fernandez Private Island

ஜாக்குலின் 2009ஆம் ஆண்டு பாலிவுட்டில் நுழைந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு மர்டர் 2 படத்தின் மூலம் முதல் ஹிட் கொடுத்தார். ஐந்து ஆண்டுகளில் 5 பெரிய வெற்றிப் படங்களில் நடித்தார். பிறகு அவர் படங்கள் பல தோல்விப் படங்களாக முடிந்தன. ஜாக்குலின் தற்போது அக்‌ஷய் குமாரின் காமெடி படமான 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் நடித்து வருகிறார்.

Latest Videos

click me!