நடிகை பாவனா படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பியபோது, ஒரு வாகனத்தில் வந்த கும்பலால் அவர் கடத்தப்பட்டு, காரின் உள்ளேயே அவர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாவனா, ஐந்தாண்டுகள் சினிமா பக்கமே வராமல் இருந்தார். கடந்த 2022ம் ஆண்டு முதல் தான் அவர் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.