Published : Aug 27, 2024, 07:36 PM ISTUpdated : Aug 27, 2024, 09:05 PM IST
Youtube பிராங்க் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில், இவரின் மனைவி பிஜிலி ரமேஷின் கடைசி ஆசை குறித்து கூறி... கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
திறமை இருந்தும் ஒரு சிலர், கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தங்களுடைய வாழ்க்கையையே தொலைத்து விடுகின்றனர். அந்த வகையில் திறமையாக நடிக்கும் ஆளுமை இருந்தும், காமெடி திறமை இருந்தும், குடியால் தன்னுடைய வாழ்க்கையை சூனியமாக்கி கொண்டவர் பிஜிலி ரமேஷ்.
25
Bijili Ramesh Death
திருமணத்திற்கு முன்பு இவர் நண்பர்களுடன் சேர்ந்து சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்தே வீணாக்கிய நிலையில், பின்னர் சித்துவின் பிராங்க் நிகழ்ச்சி மூலம் இவரின் காமெடி திறமை தொட்டி எங்கும் பிரபலமானது. இவருடைய எதார்த்தமான பேச்சு மற்றும் நடிப்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கர்ந்தது.
யு டியூப் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பிஜிலி ரமேஷ், ஹிப்பாப் ஆதியுடன் நட்பே துணை, அமலாபால் நடித்த ஆடை, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிக்கும் போது நண்பர்களின் கூட்டமும் கூடவே இருந்ததால் குடும்பத்தை கவனித்துக் கொண்டாலும், குடிப்பழக்கத்தையும் இவரால் விட முடியாமல் போனது.
45
Cook With Comali
விஜய் டிவி 'குக் வித் கோமாளி' சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த போதும், குடிப்பழக்கத்தால் அதுவும் கைநழுவி போனதாக கூறப்படுகிறது. நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் கிடைத்த வேலைக்கு போனாலும்... தன்னை பார்க்கும் ரசிகர்கள் தன்னிடம் வந்து செல்பி கேட்பதால்... சுதந்திரமாக வேலை செய்யமுடியாமல் போனதாகவும் தன்னுடைய பழைய பேட்டியில் கூறி இருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே மிகவும் உடல் நலம் குன்றி... வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்த பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். பிஜிலி ரமேஷ் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் ஆவார். எனவே தன்னுடைய வாழ்நாளில் ரஜினிகாந்துடன் ஒரே ஒரு படத்தில் ஒரு சீனிலாவது நடித்து விட வேண்டும் என ஆசை பட்டதாகவும்... ஆனால் அவரின் இந்த ஆசை கடைசி வரை நினைவேறாமல் போய் விட்டது என கூறியுள்ளார். பிஜிலி ரமேஷின் வீட்டில்... அவர் படுத்து தூங்கும் இடத்தின் தலை மாட்டில் ரஜினிகாந்தின் புகைப்படம் தான் இருக்கும் என்றும்... அதை பார்த்து தான் பிஜிலி ரமேஷ் கண் விழிப்பார் என்றும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.