க்யூட்.. கல்யாணத்துல எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. சிவகார்த்திகேயன் - ஆர்த்தியின் வெட்டிங் போட்டோஸ்!

First Published | Aug 27, 2024, 7:01 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் 14-வது திருமண நாளை கொண்டாடுகிறார். இந்தப் பயணத்தில் அவர் சந்தித்த வெற்றிகள், தோல்விகள், மற்றும் தற்போதைய படங்கள் பற்றிய ஒரு பார்வை.

Sivakarthikeyan

சின்னத்திரையில் தனது கெரியரை சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார். கடின உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றின் மூலம் கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி உள்ளார்.

Sivakarthikeyan

நடிகர் மட்டுமின்றி, தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்த்தார்.

Tap to resize

Sivakarthikeyan

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan wedding photos

எனினும் தனது திரை வாழ்க்கையில் சில சறுக்கல்களையும் அவர் சந்தித்தார். ஆனால் அவரின் பெரும்பாலான படங்கள் ஹிட்  படங்களாக அமைந்ததால் வெற்றி நடிகராகவே சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார்.

Sivakarthikeyan wedding photos

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் ஆகிய படங்களும் ஹிட் படங்களாகவே அமைந்தன. தற்போது அமரன் என்ற பயோபிக் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Sivakarthikeyan wedding photos

இதை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி வரும் எஸ் 23 படத்திலும், சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே அதாவது ஆர்த்தி என்ற பெண்ணை சிவகார்த்திகேயன் திருமணம் செய்து கொண்டார். அவரின் மாமா மகள் தான் இந்த ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ், பவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

Sivakarthikeyan wedding photos

இன்று சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதி தங்கள் 14வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஜோடியின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Latest Videos

click me!