ஆனால் இன்று அந்த நிலையே வேறு, நாட்டின் தலை சிறந்த பாடகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல ஒரு சில பாடகர்கள் ஒரு பாடலுக்கு 20 லட்சம் கூட சம்பளமாக பெருகின்றார்களாம். குறிப்பாக இந்திய மொழிகள் பலவற்றுள் டாப் பாடகியாக திகழும் ஸ்ரேயா கோஷல், ஒரு பாட்டுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் வரை சம்பளமாக பெருகின்றாராம். ஹிந்தியில் மட்டுமல்ல, தமிழிலும் அவர் டாப் பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.