Keerthy Suresh : இந்த ஆண்டு தனது மூன்றாவது திரைப்படமாக ரகு தாத்தா திரைப்படத்தை வெளியிட்டு மீண்டும் வெற்றி வாகை சூடியுள்ளார் பிரபல தமிழ் திரையுலக நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ஜெயம் ரவியின் "சைரன்" திரைப்படத்தில் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக தோன்றி அசத்தினார் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனைத் தொடர்ந்து வெளியான பிரபாஸின் "கல்கி" திரைப்படத்தில், பிரபாஸ் பயன்படுத்தும் புஜ்ஜு என்ற காருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் குரல் கொடுத்தது இவர் தான். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள கீர்த்தியின் திரைப்படம் தான் ரகு தாத்தா.
மிகப்பெரிய நடிகையாக மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் வலம்வந்த மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இவரும் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாகவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல இவர் நாயகியாக அறிமுகமானதும் மலையாள மொழி திரைப்படங்களில் தான். தமிழில் "இது என்ன மாயம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2015ம் ஆண்டு இவர் அறிமுகமானார்.
34
Actress Keerthy Suresh Photos
தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான "மகாநதி" என்ற படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் முதல் முறையாக பாலிவுட் நாயகியாக மாறியுள்ளார் கீர்த்தி. பிரபல இயக்குனர் அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் "பேபி ஜான்" என்ற படத்தில் நடித்து வருகின்றார். அப்பட ஹீரோ வருண் தவானுடன், கீர்த்தி காதல் வயப்பட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகி வருகின்றது.
44
Actress keerthy suresh
பாலிவுட் பக்கம் போனதுமே, அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலுக்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ், அண்மையில் Filmfare விருது வழங்கும் விழாவில் உச்சகட்ட கவர்ச்சியில் தோன்றியது அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் ஒன்று இப்போது மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வருகின்றது.