பொய் சொல்லி தப்பித்த ரோகிணி! மீனாவை காரணம் காட்டி போடும் புது பிளான்! சிறகடிக்க ஆசை அப்டேட்!

Published : Aug 27, 2024, 05:08 PM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவை சிக்க வைத்து விட்டு... ரோகிணி போடும் புது பிளான் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
பொய் சொல்லி தப்பித்த ரோகிணி! மீனாவை காரணம் காட்டி போடும் புது பிளான்! சிறகடிக்க ஆசை அப்டேட்!
Vijay tv Serial

விஜய் டிவி தொலைக்காட்சியில் TRP-யில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள சீரியல் சிறகடிக்க ஆசை. ஏழை வீட்டு பெண் என்பதால் அவரை வேலைக்காரி போல் நடத்தும் மாமியார், பற்றிய வழக்கமான கதைக்களம் தான் இந்த சீரியல் என்றாலும்... இந்த சீரியலை கொண்டு செல்லும் விதம் தனித்துவமானதாக உள்ளது.
 

25
Siragadikka aasai

அண்ணாமலை ரயில்வே வேலையில் இருக்கும் நிலையில், இவர் ரிடேயர் ஆகும் கடைசி நாளில், மீனாவின் தந்தை இவரில் ரயிலில்  அடிபட்டு உயிரிழக்கிறார். மீனா வீட்டிற்கு ஆறுதல் சொல்ல செல்லும் அண்ணாமலை, தன்னுடைய மகன் மனோஜுக்கு மீனாவை திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்க,  மனோஜ் மீனாவை திருமணம் செய்து கொள்ள அண்ணாமலையில் ரீடேயர்மென்ட் பணம் மொத்தத்தையும் வாங்கி கொண்டு, திருமண மண்டபத்தை விட்டு ஓடிவிடுகிறார்.

உன்னை முடிவில்லாமல் நேசிக்கிறேன்! திருமண நாளில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஆர்த்தி!
 

35
Meena and Muthu Marriage

மீனாவை, அண்ணாமலையின் இரண்டாவது மகன் முத்து திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. மனோஜ்... மலேசியாவை சேர்ந்த பெண் என கூறி ஏமாற்றும் ரோகிணியை திருமணமம் செய்து கொள்கிறார். ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி க்ரிஷ் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். ஆனால் இந்த தகவல் அனைத்தையும் மறைத்து தான் இந்த திருமணமே நடக்கிறது.

45
Serial Latest update

தற்போது அண்ணாமலையின் மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகி ஒரே வீட்டில் உள்ள நிலையில்... ரோகிணி எப்படியும் ஒரு குழந்தையை பெற்று கொள்ள வேண்டும் என்கிற முடிவில் உள்ளார். இதற்காக அடிக்கடி, மீனாவின் தங்கை சீதா வேலை செய்யும் மருத்துவமனைக்கும் வருகிறார். அப்படி வரும் போது  மீனாவின் தங்கை சீதா ரோகிணி ஏன் வந்து செல்கிறார் என விசாரிக்கையில்... இரண்டாவது முறையாக கரு தரிக்க ரோகிணி மருத்துவமனைக்கு வந்தது உறுதியாகிறது. 

தமன்னாவால்... ரம்பா குடும்ப வாழ்க்கையில் வந்த பிரச்சனை! கணவர் செய்ததை வெளியே சொன்ன நடிகை!

55
Rohini Plan

இதை மீனா ஸ்ருதியிடம் சொல்ல... இந்த பிரச்சனை அனைவருக்குமே தெரிந்து மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்கிறது. ரோகிணி ஏற்கனவே தான் கர்ப்பமாக இருந்ததாகவும் அந்த குழந்தை கலைந்து விட்டதாக பொய் சொல்கிறார். இதை தொடர்ந்து விஜயாவிடம் பேசும் போது... இந்த வீட்டில் சுதந்திரம் இல்லை என்பதால், தனி குடித்தனம் என பேச்சை எடுக்க, விஜயா அதிர்ச்சி அடைகிறார். மீனாவை வைத்து வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என நினைக்கும் ரோகிணியின் திட்டம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories