Sivakarthikeyan Success
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் கால் பதித்து, உச்ச நடிகராக மாறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு உடல் பலத்தை விட.. மன பலம் தான் மிகவும் முக்கியம். இப்படி பல போராட்டங்களை தாண்டி தன்னுடைய மன வலிமையால் இன்று முன்னணி இடத்தை அடைந்திருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.
Vijay TV Fame
விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு சீசன் 2' நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக கலந்து கொண்டு, டைட்டில் பட்டதை வென்றவர் சிவகார்த்திகேயன். பின்னர் கலக்கல் சாம்பியன்ஸ், ஜோடி நம்பர் ஒன் சீசன் 3 போன்ற நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்து இவரை பார்க்க முடிந்தது. இதன் பின்னர் அதிரடியாக' அது இது எது' நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக மாறினார். காமெடியுடன் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சூப்பர் சிங்கர் ஜூனியர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் சீசன் 2, ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் ஜூனியர், உள்ளிட்டா பல நிகழ்ச்சிகளை விஜய் டிவிக்காக தொகுத்து வழங்கினார்.
தமன்னாவால்... ரம்பா குடும்ப வாழ்க்கையில் வந்த பிரச்சனை! கணவர் செய்ததை வெளியே சொன்ன நடிகை!
Good Stories
அப்படியே திரைப்பட வாய்ப்பையும் கைப்பற்ற முயற்சித்த இவருக்கு, 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மெரினா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே சிவகார்த்திகேயன் தனக்கு பொருந்தக்கூடிய காமெடி கலந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தது இவருடைய திரையுலக வாழ்க்கையில், நிலையான இடத்தை பிடிக்க உதவியது. அதன்படி இவர் நடித்த மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், மான் கராத்தே, போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றன.
Sivakarthikeyan Development
அப்படியே கொஞ்சம் ஆக்ஷன் கதைகளிலும் கவனம் செலுத்திய சிவகார்த்திகேயன், காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களின் வெற்றியால்... ஸ்டார் நடிகர்களின் அந்தஸ்தை பெற்றார். எண்ணி 5 வருடத்திற்குள் விஜய், அஜித், ஜெயம் ரவி, விக்ரம், போன்ற நடிகர்களுக்கே டப் கொடுக்கும் விதமாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது மட்டும் இன்றி, கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் மாறினார்.
காதல் ஜோடி முதல்... கமல் பட வில்லன் வரை! பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
Amaran movie
வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மேஜர் முகுந்தன் வரதராஜன் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் பெயரிடாத பட ஒன்றிலும், சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Sivakarthikeyan and Aarthy marriage
நடிகை சிவகார்த்திகேயன் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே தன்னுடைய உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2010 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27-ஆம் தேதி அதாவது இதே நாளில் தான் இவர்களின் திருமணம் நடந்தது. இன்று தன்னுடைய 14 வது திருமண நாளை சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடி தங்களுடைய மூன்று குழந்தைகளுடன் கொண்டாடி வரும் நிலையில், ஆர்த்தி மிகவும் உணர்வு பூர்வமான பதிவுடன்... புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா கூட நடிச்சதுக்கு தான் நிறைய சம்பளம் கொடுத்தாங்க! பிஜிலி ரமேஷ் பகிர்ந்த தகவல்!
Aarthy Instagram Post
சிவகார்த்திகேயன் குறித்து அவர் போட்டுள்ள பதிவில், என்னில் சிறந்த பகுதி நீங்கள். நான் உன்னை முடிவில்லாமல் நேசிக்கிறேன் என கூறி... இருவரும் சமீபத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு... ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.