தமன்னாவால்... ரம்பா குடும்ப வாழ்க்கையில் வந்த பிரச்சனை! கணவர் செய்ததை வெளியே சொன்ன நடிகை!

First Published | Aug 27, 2024, 2:53 PM IST

நடிகை தமன்னாவால் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், கணவரை இன்ஸ்டாகிராமில்  ஏன் ஃபாலோ பண்ணவில்லை என்பது பற்றியும் நடிகை ரம்பா சமீபத்தில் தன்னுடைய கடை திறப்பு விழாவில் பேசியுள்ளார்.
 

Rambha Debut

90களில் விஜய், அஜித், ரஜினி, கார்த்திக், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரம்பா. 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமான இவர், பின்னர் அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளை தாண்டி பாலிவுட் படங்களிலும் கலக்கினார்.
 

Rambha First Tamil movie

தமிழில் நடிகர் பிரபு நடித்த உழவன் படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த ரம்பா... பின்னர் 1996 ஆம் ஆண்டு கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து செங்கோட்டை, சுந்தர புருஷன், சிவசக்தி, தர்மசக்கரம், அருணாச்சலம், ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, சுயம்வரம், மின்சார கண்ணா, போன்ற பல படங்களில் நடித்தார்.
 

காதல் ஜோடி முதல்... கமல் பட வில்லன் வரை! பிக்பாஸ் 8 போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

Tap to resize

Rambha Acting More Languages

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளை கடந்து ஹிந்தி, பெங்காலி, போஜ்புரி, ஆங்கிலம், போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக தமிழில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'பெண் சிங்கம்' என்கிற படத்தில் எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில் நடித்திருந்தார். பின்னர் அதே ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
 

Rambha family

திருமணத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய ரம்பா, தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயாகவும், தன்னுடைய கணவரின் பிஸ்னஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இவர் இந்தியாவில் துவங்கிய கிச்சன் பிசினஸ் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது கிளையை சமீபத்தில் கோயம்புத்தூரில் துவங்கினார். இதன் முதல் பிரான்ச் தொடங்கப்பட்டபோது ரம்பாவால் அதில் கலந்து கொள்ள முடியாது.

குடிச்சுட்டு வந்ததால் குக் வித் கோமாளியில் இருந்து பாதியில் துரத்திவிடப்பட்டாரா பிஜிலி ரமேஷ்? காரணம் என்ன ?
 

Rambha started Business

எனவே இரண்டாவது பிரான்ச் தொடக்க விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என கூறியிருந்தார். சொன்னது போலவே இரண்டாவது கிளை ஒப்பனில் கலந்து கொண்டு சிறப்பித்த ரம்பா, கோயம்புத்தூருக்கும் தனக்கும் இடையே உள்ள நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  தன்னுடைய முதல் படமான உழவன் திரைப்படம் கோயம்புத்தூரில் தான் படமாக்கப்பட்டதாகவும், அப்போது கோயம்புத்தூர் மக்கள் தன் மீது மிகவும் அன்பாக பார்த்து கொண்டதாக தெரிவித்தார்.
 

Rambha About Recent Movies

திருமணத்திற்கு பின்னர், திரைப்படங்களில் நடிக்காததன் காரணம்..  முன்னணி ஹீரோக்களின் படங்களில் கூட ஹீரோயின்களுக்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாகட்டுவும், பாகுபலி படத்திற்கு பின்னர் நான் அப்படி எந்த ஒரு படத்தையும் விரும்பி பார்க்கவில்லை என ரம்பா பேசியுள்ளார். நான் இப்போது வரும் படங்களில் நடித்தால் தன்னுடைய குழந்தைகள் கூட தன்னுடைய படத்தை பார்க்க மாட்டார்கள் என பேசியுள்ளார்.

நயன்தாரா கூட நடிச்சதுக்கு தான் நிறைய சம்பளம் கொடுத்தாங்க! பிஜிலி ரமேஷ் பகிர்ந்த தகவல்!
 

Rambha About Husband and Tamannaah Bhatia

தொடர்ந்து பேசிய இவர், தன்னுடைய கணவர் குறித்தும், தமன்னாவால் தங்கள் இடையே வெடித்த பிரச்சனை குறித்தும் பகிர்ந்து கொண்டார். என்னுடைய கணவர் விஷயத்தில் நான் ரொம்ப பொஸசிவ். அவரிடம் மட்டும் எனக்கான உரிமையை நான் எதிர் பார்ப்பேன். என்னுடைய கணவர் இன்ஸ்டாகிராம் துவங்கியபோது அவர் என்னை தான் முதலில் பின்தொடர வேண்டும் என விரும்பினேன். ஆனால் அவர் எனக்கு முன் தமன்னாவை ஃபாலோ செய்தார். 

Rambha

எனவே நான் இப்போது வரை என்னுடைய கணவரை ஃபாலோ செய்யவில்லை. அவரிடமே இதை கூறியுள்ளேன் அவர் மட்டுமே என்னை ஃபாலோ செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தற்போது வரை எங்கள் இருவர் மத்தியிலும் இருந்து தான் கொண்டிருக்கிறது என ரம்பா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!
 

Latest Videos

click me!