பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; பிருத்விராஜ் ஆவேசம்!

First Published Aug 27, 2024, 2:41 PM IST

2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தை தொடர்ந்து ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை தற்போது வெளியாகி மலையாள திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை குறித்து பல்வேறு திரைப் பிரபலங்களின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

Hema Committee

2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹேமா என்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
 

Hema committee report

இந்த குழு தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டு கேரள அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் இந்த அறிக்கையை கேரள அரசு வெளியிடவில்லை. இந்த சூழலில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டது.

Latest Videos


Hema committee report

இந்த அறிக்கை மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மலையாள திரையுலகில் செல்வாக்கு மிக்க நடிகர்கள், இயக்குனர்களால் நடிகைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 

Hema committee

இந்த அறிக்கை குறித்து மலையாள திரையுலகின் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல மலையாள நடிகர் டோவினா தாமஸ் இதுகுறித்து பேசிய போது, இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விஷயங்கள் மலையாள திரையுலகில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இருப்பதாக கூறினார். அதே போல் இயக்குனர் பிளெஸ்ஸி, தீபா தாமஸ் உள்ளிட்டோரும் ஹேமா கமிட்டி தொடர்பாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Prithviraj

இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் இதுகுறித்து பேசி உள்ளார். ஹேமா கமிட்டி விவகாரத்தில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ள பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Prithviraj

மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா சரியாக செயல்படவில்லை என்று கூறிய அவர், ஹேமா கமிட்டியின் அறிக்கை அதிர்ச்சியளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டி அமைக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் தானும் ஒருவன் என்று பிருத்விராஜ் பேசி உள்ளார். குற்றம்சாட்டப்பட்ட பெயர்களை வெளியிடுவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பிருத்விராஜ் கூறியுள்ளார்.

click me!