நான் சிக்கன் சாப்பிடும் பிராமணன்! தயிர் சாதம்னா அலர்ஜி... நடிகர் ஸ்ரீகாந்த் ஓபன் டாக்

First Published | Aug 27, 2024, 1:21 PM IST

நடிகர் ஸ்ரீகாந்த், தான் ஒரு பிராமணராக இருந்தாலும் சிக்கன் சாப்பிடுவேன் என பேட்டி ஒன்றில் ஓப்பனாகவே பேசி இருக்கிறார்.

Actor Srikanth

பாலச்சந்தர் இயக்கிய ஜன்னல் என்கிற தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இதையடுத்து கடந்த 2002ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜாக் கூட்டம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படமே வெற்றியடைந்ததை அடுத்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தார். இதில் பார்த்திபன் கனவு படத்துக்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருதையும் வென்றார் ஸ்ரீகாந்த்.

Srikanth Wife Vandana

யாரடி நீ மோகினி படத்தின் தெலுங்கு வெர்ஷனில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ஸ்ரீகாந்த், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்து அசத்தி இருந்தார். இப்படி குறிப்பிடத்தக்க வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்த ஸ்ரீகாந்த், கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்கள் எதுவும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் கணிசமாக குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஃபுல் லிஸ்ட் இதோ!

Tap to resize

Srikanth

நடிகர் ஸ்ரீகாந்த் மிஸ் பண்ணிய படங்களும் ஏராளம், மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, பாலா இயக்கிய நான் கடவுள், ஷியாம் நடித்த 12 பி போன்ற ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதும் ஸ்ரீகாந்தின் கெரியரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு வந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தன்னுடைய பேவரைட் உணவு பற்றி ஸ்ரீகாந்த் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

Srikanth Favourite Food

அதில், தான் ஒரு சிக்கன் சாப்பிடும் பிராமணன் என கூறி இருக்கிறார் ஸ்ரீகாந்த். அவருக்கு சிறு வயதில் இருந்தே தயிர்சாதம் என்றால் அலர்ஜியாம். உடன் படிக்கும் பசங்க, ஐயருன்னா தயிர் சாதம் தான் சாப்பிடுவாங்கனு எனக்கு தயிர் சாதம்னே பேர் வச்சிட்டாங்க. ஆனா நான் சிக்கன் சாப்பிடுவேன். சொல்லபோனால் நான் ஒரு சிக்கன் சாப்பிடும் பிராமணன் என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... தொலைந்த ஹார்டுடிஸ்க் கிடச்சிருச்சா? லால் சலாம் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி தீயாய் பரவும் தகவல் உண்மையா?

Latest Videos

click me!