பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபலம்? போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

First Published | Aug 27, 2024, 12:48 PM IST

விஜய் டிவியில் அக்டோபர் மாதம் முதல் துவங்க உள்ள 'பிக்பாஸ் சீசன் 8' (Bigg Boss 8 Tamil) நிகழ்ச்சியில் சமீபத்தில் மலையாள நடிகை ரேவதி சம்பத், பாலியல் குற்றம்சாட்டிய நடிகர் ரியாஸ் கான் கலந்து கொள்ள உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Vijay TV Reality Show:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, வெற்றிகரமாக 7 சீசன் முடிந்து எட்டாவது சீசன் விரைவில் துவங்க உள்ளது.
 

Bigg Boss Season 8 House:

இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. அதே போல் பிக்பாஸ் வீட்டை கட்டமைக்கும் பணி, இதுவரை துவங்கப்படாத நிலையில்... கூடிய விரைவில் அதற்கான வேலைகள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா கூட நடிச்சதுக்கு தான் நிறைய சம்பளம் கொடுத்தாங்க! பிஜிலி ரமேஷ் பகிர்ந்த தகவல்!

Tap to resize

Ulaga Nayagan Kamal Haasan

மேலும் கடந்த ஏழு சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளர் கமல் ஹாசன், தன்னுடைய திரைப்பட பணி காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இவரின் இந்த முடிவுக்கு காரணம் அரசியல் நோக்கமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 

Next Biggboss Anchor

கமல் ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால், பிக்பாஸ்  சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள அந்த பிரபலம் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பொருளாக இருந்த நிலையில், நயன்தாரா, சூர்யா, சரத்குமார், அரவிந்த்சாமி, ரம்யா கிருஷ்ணன் என பல நடிகர்களின் பெயர் இந்த லிஸ்டில் அடிபட்டது.

ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!
 

Vijay Sethupathi

ஆனால் ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளது பிரபல நடிகர் விஜய் சேதுபதி என தெரிய வந்துள்ளது. ஆனால் பிக் பாஸ் புரோமோ வெளியாகும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது என்கிற நிலைபாடும் தான் தற்போது நிலவி வருகிறது.

TTF Vasan And Shalin Zoya

இது ஒரு புறம் இருக்க தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய அடுத்த அடுத்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது சில பிரபலங்களின் பெயர்கள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த முறை இளம் காதல் ஜோடியான டிடிஎஃப் வாசன் மற்றும் ஷாலின் சோயா இருவரும் ஒன்றாக இணைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

தாய்மையை ரசிக்கும் நடிகை பிரணீதா! வெள்ளை உடையில்... பிரக்னன்சி போட்டோ ஷூட்!

Bigg Boss 8 Contestant:

இவர்களை தவிர தொகுப்பாளரும் நடிகருமான ஜெகன், நடிகை பூனம் பஜ்வா, நடிகை ப்ரீத்தி முகுந்தன், நடிகர் ரஞ்சித், குக் வித் கோமாளி குரேஷி, தொகுப்பாளர் மாகாபா, இன்ஸ்டா பிரபலமான அமலா ஷாஜி, நடிகர் ரியாஸ் கான்  நடிகர் அருண் பிரசாத்  நடிகை பிரகிடா சாகா,  பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் இந்த லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர்.

Latest Videos

click me!