நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் விஜய்யின் இளம் வயது லுக்கை டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாக்கி உள்ளனர். இளம் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மற்றொரு விஜய் கேரக்டருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
24
Thalapathy Vijay
கோட் படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், பிரேம்ஜி, ஜெயராம், லைலா, வைபவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கோட் திரைப்படம் 330 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நடிகர் விஜய்க்கு மட்டும் ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
கோட் திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே பிசினஸில் போட்ட காசை எடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இப்படத்தின் பிசினஸ் மட்டும் 410 கோடிக்கு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் படங்கள் என்றாலே ரசிகர்கள் முதல் காட்சியை பார்க்க அதிகளவில் ஆர்வம் காட்டுவர். எத்தனை ஆயிரத்திற்கு டிக்கெட் விற்றாலும் அதை வாங்கி முதல் காட்சி பார்க்கும் ரசிகர் கூட்டமும் விஜய்க்கு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லாததால் 9 மணிக்கு தான் அதன் முதல்காட்சி தொடங்கும்.
44
GOAT FDFS Tickets in Kerala
ஆனால் மற்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்காட்சிகள் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக கேரளாவில் 4 மணிக்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால், அதற்கான டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் கர்நாடகாவிலும் அதிகாலை காட்சி திரையிடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் ரசிகர்கள், தமிழக அரசும் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.