சினிமாவில் களமிறங்கும் தனுஷின் வாரிசு.. NEEK பட முதல் சிங்கிளில் உள்ள சூப்பர் சர்ப்ரைஸ்!

First Published | Aug 27, 2024, 8:39 PM IST

NEEK Update : இயக்குனர் தனுஷின் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படத்தின் பாடல் வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

Raayan Movie

தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், பா. பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் கோலிவுட் உலகில் பயணிக்க தொடங்கினார். இந்நிலையில் மீண்டும் அவர் இயக்குனர் அவதாரம் எடுத்த திரைப்படம் தான் "ராயன்" கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி உலக அளவில் வெளியாகி சுமார் 158 கோடி ரூபாயை அப்படம் இதுவரை வசூல் செய்திருக்கிறது. இசைப்புயலின் இசையில் இப்படத்தில் வந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

அன்று பாவனா.. இன்று ரேவதியா? ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை - நடிகை பாவனாவிற்கு அன்று நடந்து என்ன?

Kubera movie

அந்த திரைப்பட பணிகளை முடித்த இயக்குனர் தனுஷ், தெலுங்கு மொழி திரைப்படமான தனது "குபேரா" பட பணிகளை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில் தனக்கு கிடைத்துள்ள ஒரு சிறிய இடைவெளியில், தனது அடுத்த திரைப்படம் (இயக்குனராக) குறித்து அப்டேட்டுகளை அவர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். முற்றிலும் இளைஞர்களை வைத்து 2K கிட்ஸ்களுக்கு பிடித்தார் போல "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார்.

Tap to resize

nilavuku en mel ennadi kobam

இந்த திரைப்படத்தில் அணிகா சுரேந்திரன் மற்றும் இளம் நடிகர் Mathew Thomas உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி NEEK திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lyricist Yatra

இந்நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்திரா, இந்த "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கவுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி வெளியாகஉள்ள அந்த "கோல்டன் ஸ்பேரோ" என்கின்ற முதல் சிங்கிள் பாடலுக்கு வரிகளை எழுதி, யாத்ரா ஒரு குட்டி கவிஞராக தனது திரையுலக பயணத்தை துவங்கவுள்ளார்.

பிஜிலி ரமேஷ் உயிரை காவு வாங்கிய குடி; கடைசி வரை நிறைவேறாமல் போன அவர் ஆசை - கதறிய மனைவி!

Latest Videos

click me!