7 வருட கஷ்டம்! ஒரே நாளில் ட்ராப்பான 'சேது' படம்.. முதல் ஹீரோ யார் தெரியுமா? அமீர் கூறிய தகவல்!

First Published | Aug 27, 2024, 9:13 PM IST

இயக்குனர் அமீர், 'சேது' படம் உருவான விதம் குறித்து, திரைப்பட பூஜை ஒன்றில் கலந்து கொண்டபோது கூறியுள்ளார். இந்த தகவல்கள் கேட்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

Ameer

இயக்குனர் சாம் என்பவர் இயக்கத்தில், புதுமுக நடிகர்களான தேவ் மற்றும் தேவிகா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க உள்ள திரைப்படம் 'யோலோ'. இந்த படத்தின் பூஜை கடந்த ஜூலை மாதம் போடப்பட்ட நிலையில், இதில் கலந்துகொண்ட இயக்குனர் அமீர் 'சேது' படத்தின் பூஜை படம் உருவான விதம் குறித்து, இதுவரை யாருக்கும் தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
 

Mounsam Peasiyathe

இயக்குனர் அமீர், நடிகர் சூர்யாவை வைத்து 'மௌனம் பேசியதே' என்கிற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து இவர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் தேசிய விருதை பெற்றது. ஒரு சில படங்களே இயக்கினாலும் தனக்கென தனி ஸ்டைலை வைத்திருக்கும் அமீர்... சமீப காலமாக சிறந்த நடிகராகவும் அறியப்படுகிறார்.

பிஜிலி ரமேஷ் உயிரை காவு வாங்கிய குடி; கடைசி வரை நிறைவேறாமல் போன அவர் ஆசை - கதறிய மனைவி!
 

Latest Videos


Seathu movie

இவர் தன்னுடைய முதல் படமான, 'மௌனம் பேசியதே' படத்தை இயக்குவதற்கு முன், இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார், பாலாவும் அமீரும் தற்போது வரை சிறந்த நண்பர்களாக உள்ளனர். எனவே இயக்குனர் பாலாவின் முதல் படமான சேது உருவான விதம், இந்த படத்தை எடுத்து முடக்க பாலா பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் அறிந்தவர் அமீர்.
 

Director Bala

பாலு மகேந்திராவின் ஆலமரத்தில் இருந்து விழுந்த விதை தான் இயக்குனர் பாலா. சேது படத்தின் கதையை 'அகிலன்' என்கிற பெயரில் அஜித் குமாரை வைத்து இயக்க பாலா திட்டமிட்ட நிலையில்,  இந்த படத்தின் பூஜை காலையில் போடப்பட்டு... மாலையே படம் டிராப் என செய்திகள் தகவல்கள் வெளியானதாம். இந்தியாவிலேயே இப்படி ஒரு தகவல் வெளியான முதல் படம் இதுவாக தான் இருக்கும் என கூறியுள்ளார் அமீர்.  

நடிகை குஷ்பூவுக்கு என்ன ஆச்சு! தொடை வரைக்கும் போடப்பட்டுள்ள கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்!
 

Ajith kumar First choice for Seathu

1993 ஆம் ஆண்டு இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், ஒருவழியாக இந்த படத்தை எடுத்து முடிக்க ஏழு வருடங்கள் ஆனதாம். அதன்படி  2000 ஆம் ஆண்டு தான் இந்த படம் முடிவுக்கு வந்ததாகவும், படத்தை யாரும் வாங்க வராததால்... ஏகப்பட்ட பிரச்சனைகளை கடந்தே இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதாக இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார்.

Director Ameer

இதை தொடர்ந்து பேசிய அவர்... ஒரு இயக்குனர் உருவாகிறார் என்றால் அது அவருக்கானது மட்டும் இல்லை என்றும், ஒரு தலைமுறைகையே உருவாக்குகிறார்கள் என்பது அர்த்தம். பாலாவிடம் இருந்து தான் நான் வந்தேன். என்னிடம் இருந்து தான் சூர்யா வந்தார். பாலாவிடம் இருந்து விக்ரம் என்கிற மிகப்பெரிய நட்சத்திரம் உருவானார் என சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.

பொய் சொல்லி தப்பித்த ரோகிணி! மீனாவை காரணம் காட்டி போடும் புது பிளான்! சிறகடிக்க ஆசை அப்டேட்!
 

click me!