தாய்மையால் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கை பாதிக்கப்பட்டதா?

First Published | Aug 27, 2024, 10:23 PM IST

திரைப்படத் துறையில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராய் விலகி இருந்தாலும்,  ஒரு பொறுப்புள்ள தாயாகத் இருந்து வருகிறார். திரைப்படங்களை விட தன்னுடைய குடும்பத்திற்கு மட்டுமே ஐஸ்வர்யா ராய் அதிக  முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.   

ஐஸ்வர்யா ராய் பச்சன்

இந்தியாவில் அழகு, நடிப்பு என்கிற இந்த இரண்டு விஷயங்களும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த அளவுக்கு வேறு எந்த நடிகைக்கும் கிடைக்கவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. ஐஸ்வர்யா ராய் தன்னை விட 3 வயது குறைவான, நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஒருமுறை ஐஸ்வர்யா ராய் குடும்பப் பொறுப்புகளால் தன்னை தான் எப்போதும் இழக்கவில்லை என்று தெரிவித்தார். குடும்பத்திற்கும், திருமண வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து தனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதைப் போல ஐஸ்வர்யா ராய் பேசி இருந்தார்.

ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யா ராய்யின் காதல் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றே... குரு படப்பிடிப்பில் அவர் அபிஷேக்குடன் நடிக்கும் போது தான் இருவர் இடையேயும் காதல் மலர்ந்தது. பின்னர் இந்த காதல் இரு குடும்பத்தினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருமணத்திலும் முடிந்தது.

Tap to resize

ஐஸ்வர்யா ராய்

இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஆராத்யா என்கிற மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் ஒரு சர்வதேச மாநாட்டில், அவரது குடும்ப வாழ்க்கை அவரது திரை வாழ்க்கையை மறைக்குமா என்று ஐஸ்வர்யா ராயிடம் கேட்கப்பட்டது. அப்போது புதிதாக திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை அப்படி இல்லை என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

ஐஸ்வர்யா ராய், ஆரத்யா பச்சன்

பின்னர் தனது மகள் மீது ஐஸ்வர்யா ராய் எந்த அளவுக்கு பொறுப்பாக இருப்பர் என அபிஷேக் பல முறை கூறியுள்ள நிலையில், ஐஸ்வர்யா ராய் தாயான பொது அவரது திரையுலக வழக்கை... பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக பாதிக்கப்பட்டது என ஒப்புக்கொண்டார்.

Latest Videos

click me!