ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஷிவானி... பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா?

Published : Aug 28, 2024, 07:43 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

PREV
19
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன ஷிவானி... பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா?
shivani Narayanan New and Old Photo

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் ஷிவானி. ஸ்கூல் படிக்கும்போதே குண்டான தோற்றத்துடன் அந்த தொடரில் நடிக்கத் தொடங்கிய ஷிவானிக்கு ஆரம்பத்தில் குணச்சித்திர வேடம் தான் கொடுக்கப்பட்டது.

29
shivani

அதன்பின்னர் தீவிர உடற்பயிற்சி செய்து ஸ்லிம்மாக மாறிய ஷிவானி, ஹீரோயினாக புரமோட் ஆனார். அந்த சீரியலில் அசீமுக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி. அந்த சமயத்தில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் ஹீரோயினாக நடித்தார் ஷிவானி.

39
Actress shivani Narayanan

சீரியலில் நடிக்கும்போதே இன்ஸ்டாகிராமில் விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதனை பதிவிட்டு வந்தார் ஷிவானி. அதிலும் ரசிகர்களை கவர அவர் கவர்ச்சி தூக்கலாக பதிவிடும் புகைப்படங்களால் அவருக்கு பாலோவர்களும் மில்லியன் கணக்கில் கூடினர்.

49
shivani Narayanan Latest Photos

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் ஷிவானி. அதில் அவர் சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸை காதலித்தது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இருவரும் நண்பர்களாகிவிட்டனர்.

59
BiggBoss shivani Narayanan

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சீரியலுக்கு முழுக்கு போட்ட ஷிவானி சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். அந்த வகையில் கோலிவுட்டில் அவர் நடித்த முதல் படம் விக்ரம். அப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக ஷிவானி நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... 7 வருட கஷ்டம்! ஒரே நாளில் ட்ராப்பான 'சேது' படம்.. முதல் ஹீரோ யார் தெரியுமா? அமீர் கூறிய தகவல்!

69
BiggBoss Fame shivani

ஷிவானி ஒரு சில நிமிடங்கள் மட்டுமே படத்தில் வந்தாலும் அவருக்கு தியேட்டரில் விசில் பறந்தன. அவர் நடித்த முதல் படமே ஹிட்டானதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படத்தில் போலீஸாக நடித்திருந்தார் ஷிவானி. அப்படம் பிளாப் ஆனது.

79
shivani Narayanan Photos

அடுத்து அவர் நடித்த நாய் சேகர் படமும் தோல்வி அடைந்ததால், அவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கின. இதனால் பிட்னஸில் இறங்கி தினசரி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார் ஷிவானி.

89
shivani Narayanan Insta Photos

இந்த நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். அதில் உதடு பெரிதாகி ஆள் அடையாளமே தெரியாத அளவு மாறிப்போய் இருக்கிறார் ஷிவானி.

99
shivani Narayanan Plastic surgery Rumours

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் இப்படி முகம் மாறி இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சர்ச்சை கிளம்பி உள்ளது. இதற்கு ஷிவானி விளக்கம் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ஊதா நிற சேலை.. மெல்லிய இடையழகில் ரசிகர்களை மடிக்கும் மிர்னா மேனன் - ஹாட் பிக்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories