கோலிவுட்டில் இத்தனை பெண் இசையமைப்பாளர்களா? பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்

Published : Aug 28, 2024, 09:59 AM IST

இசையமைப்பாளர் என்றாலே ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கோலிவுட்டை கலக்கிய பெண் இசையமைப்பாளர்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
16
கோலிவுட்டில் இத்தனை பெண் இசையமைப்பாளர்களா? பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்
Top 5 Female Music Directors

நடிகைகள், பாடகிகள் இருக்கும் அளவுக்கு சினிமாவில் பெண் இசையமைப்பாளர்கள் இல்லை. இசையமைப்பாளர்கள் என்றாலே ஆண்கள் தான் கோலோச்சி வரும் நிலையில், கோலிவுட்டில் பலரும் அறிந்திடாத பெண் இசையமைப்பாளர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் யார் என்னென்ன படங்களுக்கு இசையமைத்து உள்ளார்கள் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
Bhanumathy

பானுமதி

தமிழ் திரையுலகின் முதல் பெண் இசையமைப்பாளர் என்றால் அது பானுமதி தான். இவர் ஒரு பன்முகத்திறமை கொண்டவராக திகழ்ந்து வந்தார். இசையமைப்பது மட்டுமின்றி, நடிப்பு, இயக்கம், பாடகி, தயாரிப்பாளர் என ஜொலித்தார். இவர் தமிழில் வெளிவந்த சக்ரபானி மற்றும் இப்படியும் ஒரு பெண் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.

36
Bhavatharini

பவதாரிணி

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியும் கோலிவுட்டில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்றுள்ள பவதாரிணி, தமிழில் அமிர்தம், வெள்ளச்சி, போரிட பழகு, கல்வர்கள், மாயநதி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். கேன்சர் பாதிப்பால் இவர் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜை கோடீஸ்வரன் ஆக்கிய வாழை... ஒரே படத்தில் இத்தனை கோடி லாபமா?

46
Reihana

ரெஹானா

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் உடன்பிறந்த சகோதரி தான் ரெஹானா. இசையமைப்பாளார் ஜிவி பிரகாஷின் தாயாரான இவரும் ஒரு இசையமைப்பாளர் தான். இவர் மச்சி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஏராளமான படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.

56
Shruti Hassan

ஸ்ருதிஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் முதன்முதலில் அறிமுகமானது இசையமைப்பாளராக தான். கமல்ஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்தது ஸ்ருதி தான். அதன்பின்னர் நடிகையானதால் படங்களுக்கு அவர் இசையமைக்கவில்லை. இருப்பினும் அண்மையில் இனிமேல் என்கிற ஆல்பம் பாடலுக்கு இவர் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

66
Khatija Rahman

கதீஜா ரகுமான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமானும் ஒரு இசையமைப்பாளர் தான். இவர் அண்மையில் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த மின்மினி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... சிம்பு பட நடிகர் மீது போலீஸில் பாலியல் புகார் அளித்த நடிகை ரேவதி சம்பத்

Read more Photos on
click me!

Recommended Stories