தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆனது. அப்படத்துக்கு போட்டியாக ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல படமும் ரிலீஸ் ஆனதால் இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
24
இதில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக் குவித்து வருகிறது. குறிப்பாக முதல் நாளில் இப்படம் ரூ.12.3 கோடி வசூலித்து இருந்தது. நடிகர் சிம்புவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை பத்து தல படைத்தது. இப்படம் 4 நாள் முடிவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ரூ.50 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புள்ளது.
மறுபுறம் இதற்கு போட்டியாக மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆன விடுதலை படமும் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் வளர்ச்சி கண்டு வருகிறது. முதல்நாளில் ரூ.6.5 கோடியும், இரண்டாம் நாள் ரூ.7.5 கோடியும் வசூலித்த இப்படம் மூன்று நாள் முடிவில் ரூ.23 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படமும் முதல் வார இறுதியில் ரூ.50 கோடி வசூலை அசால்டாக கடந்துவிடும் என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது.
44
மறுபுறம் விமர்சன ரீதியாக பார்த்தால் பத்து தல படத்தை விட விடுதலை படத்துக்கு அதிகளவில் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருவதால், இப்படத்திற்கான தியேட்டர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விடுதலை படம் வார நாட்களிலும் அதிகளவில் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.