நடிகை ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் ரித்தீஷ் தேஷ்முக் ஆகிய இருவரும், Tujhe Meri Kasam என்கிற பாலிவுட் திரைப்படத்தின் மூலம், கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமாகினர்.
பின்னர் தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, போன்ற மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்த துவங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே.
மிகவும் ரொமான்டிக் நட்சத்திர ஜோடியாக பாலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும், ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா ஜோடிக்கு, இரு மகன்களும் உள்ளனர்.
இருவருமே அறிமுகமானது ஒரே படம் என்பதால்... இந்த நட்சத்திர ஜோடி, திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை, இன்று மும்பையில்... ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.