தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். கடந்த சில வாரங்களாகவே விஜய் அவருடைய மனைவி சங்கீதா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், ஆகையால் தான் 'வாரிசு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் போன்ற விசேஷங்களில் தனியாகவே கலந்து கொண்டார் என கூறப்பட்டது.
ஏற்கனவே இப்படி ஒரு பரபரப்பு விஷயம் சென்றுகொண்டிருக்கும் நிலையில், அனைவரையுமே அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக, விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில், விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், இருவரும் மியூச்சுவல் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vijay
விக்கிபீடியாவில் இடம்பெறும் தகவல்கள் மாற்றக்கூடியவை எனவே இதனைப் பயன்படுத்தி வேண்டும் என்றே சிலர், பொய்யான தகவலை எடிட்டி செய்து பதிவிட்டுள்ளனர். கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு கூட, சில அரசியல் தலைவர்களின் பெயர்களை தவறாக விக்கிபீடியாவில் பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.