ரிலீசுக்கு முன் விஜய்யின் வாரிசு படத்தை ‘வாரிசு’ நடிகருக்கு போட்டுக்காட்டிய தில் ராஜு! வெளியான முதல் விமர்சனம்

Published : Jan 03, 2023, 03:19 PM IST

வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்பே அப்படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருக்கு போட்டுக்கட்டி உள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. படம் பார்த்து அவர் என்ன சொன்னார் என்பதை தற்போது பார்க்கலாம்.

PREV
14
ரிலீசுக்கு முன் விஜய்யின் வாரிசு படத்தை ‘வாரிசு’ நடிகருக்கு போட்டுக்காட்டிய தில் ராஜு! வெளியான முதல் விமர்சனம்

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, பிரபு, எஸ்.ஜே.சூர்யா, குஷ்பு, ஷியாம், சங்கீதா, சம்யுக்தா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தான் இப்படத்தை தயாரித்துள்ளார்.

24

தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. சமீபத்தில் நடந்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இனி எஞ்சியுள்ளது வாரிசு படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் மற்றும் டிரைலர் அப்டேட் தான். இவை இரண்டும் விரைவில் வெளியாகிவிடும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... இந்த வருஷமும் ‘தல’ தீபாவளியை கொண்டாட பிளான் போடும் விக்னேஷ் சிவன் - காத்துவாக்குல வந்த கலக்கல் அப்டேட்

34

இந்நிலையில், வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்பே அப்படத்தை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணுக்கு போட்டுக்காட்டி உள்ளாராம் தயாரிப்பாளர் தில் ராஜு. சமீபத்தில் ஆர்.சி.15 பட வேலையாக சென்னை வந்திருந்த ராம்சரண் வாரிசு படத்தை பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த ராம்சரணுக்கு படம் மிகவும் பிடித்துப் போனதாம். இதையடுத்து நடிகர் விஜய்க்கு உடனடியாக போன் செய்து படம் சூப்பராக இருப்பதாக பாராட்டி இருக்கிறார்.

44

வாரிசு படத்துக்கு வாரிசு நடிகரிடம் இருந்து வந்த முதல் விமர்சனமே பாசிட்டிவ் ஆக இருப்பதால் படக்குழுவும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாம். நடிகர் ராம்சரண் தற்போது ஷங்கர் இயக்கும் ஆர்.சி.15 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தையும் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கதையை கேட்டு கழட்டிவிட்ட ரஜினி... கடும் அப்செட்டில் இருந்த டான் பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த பிரபல ஹீரோ..?

Read more Photos on
click me!

Recommended Stories