சென்னை பல்லாவரத்து பெண்ணான சமந்தா, தன்னுடைய நடிப்பு திறமையால் கோலிவுட், டோலிவுட் திரையுலகை தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க ஆயத்தமாகி விட்டார். இவரின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் நடிப்பின் மீது இவருக்கு உள்ள காதல் என்றே கூறலாம்.
கணவருடனான விவாகரத்து முடிவால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா, அதில் இருந்து மீள்வதற்காக ஆன்மீக யாத்திரை மற்றும் தன்னை பிசியாக வைத்துக்கொள்ள பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினார்.
மெல்ல மெல்ல... பழைய நிலைக்கு திரும்பியுள்ள இவர் மீண்டும் படப்பிடிப்பு, உடல்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் நிலையில், சமந்தாவுடன் இந்தி வெப் தொடரான 'ஃபேமிலி மேன்' வெப் தொடரில், நடித்த நடிகர் மனோஜ் பாஜ்பாய் சமந்தாவிற்கு நேர்காணல் ஒன்றில் அறிவுரை கூறியுள்ளார்.