Rishab Shetty : தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறாரா காந்தாரா பட புகழ் ரிஷப் ஷெட்டி - உண்மையா.? நடந்தது என்ன.?

First Published | Feb 17, 2023, 10:21 PM IST

காந்தாரா பட புகழ் ரிஷப் ஷெட்டி தாதாசாகேப் பால்கே விருது பெறுகிறார் என்று தகவல் வெளியானது. இதனையொட்டி அவருக்கு ரசிகர்களும், திரைபிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Tap to resize

சமீபத்தில் ரிஷப் ஷெட்டி , கேஜிஎஃப் பட நடிகர் யஷ் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியும் உடனிருந்தார்.

இந்தச் சந்திப்பில் சினிமா, கர்நாடகாவின் கலாச்சாரம், பண்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 'சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்' என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வருகிற 20 ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிஷப் ஷெட்டிக்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆனால் இது உண்மையில்லை என்றும், உண்மைக்கு புறம்பாக தகவல்களை சிலர் வெளியிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி,  நடப்பாண்டிற்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில், நம்பிக்கைகுரிய நட்சத்திரம் எனும் பிரிவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. சிலர் மாற்றி கூறியுள்ளதால் இந்த சர்ச்சை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..தரக்குறைவான வார்த்தையை உச்சரித்த பிரபல நடிகர்.. அஜித் குமாரை கண்டிக்கும் தமிழக பாஜக - சர்ச்சையில் துணிவு!

Latest Videos

click me!