சூப்பர் ஸ்டார் வீட்டில் வருமான வரித்துறை 4 மணிநேரம் அதிரடி ரெய்டு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?

First Published | Feb 17, 2023, 8:30 PM IST

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டில், அதிரடியாக போலீசார் வருமானவரி சோதனை நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

சில நிதி விவகாரங்களில், ஏற்பட்ட பண பரிவர்த்தனை காரணமாக மோகன்லாலிடம் விளக்கம் கேட்பதற்காக இன்று, வருமான வரித்துறை அவருடைய வீட்டில் சோதனை நடத்தியதாகவும், வாக்குமூலம் சேகரித்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியாக, மோகன்லாலின் வாக்குமூலத்தை வருமான வரித்துறை பதிவு  செய்துள்ளனர். சில நிதி விவகாரங்கள் தொடர்பாக மோகன்லாலிடம் சில ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இதை கவனித்தீர்களா? விக்ரமிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்.! மிரட்டல் லுக்கில் ரசிகர்களை மெர்சலாக்கிய சீயான்!

Tap to resize

அதே போல் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருக்கும், மோகன் லாலுக்கு இடையே நடந்த வணிக ரீதியான பண பரிவர்த்தனை குறித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களையும் வருமான வரித்துறை ஆய்வு செய்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் ஆய்வு நிறைவடைந்த நிலையில், மீண்டும் சில ஆவணங்களை கைப்பற்றி மீண்டும் விசாரணையை வருமான வரித்துறை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா - ஜெசி தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து!

Latest Videos

click me!