நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. கோட் படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
24
Vijay, Doli Chai wala
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று இளமையான தோற்றம் என்பதால், டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி நடிகர் விஜய்யை இளமையாக காட்டி உள்ளனர். இதற்காக அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து டீ ஏஜிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில், கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ஸ்பார்க் என்கிற பாட்டு நேற்று ரிலீஸ் ஆனது. அதில் விஜய்யின் டீ ஏஜிங் லுக் இடம்பெற்று இருந்தது. அந்த லுக் கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.
டீ ஏஜிங் லுக்கில் நடிகர் விஜய்யை பார்த்த பலரும் வெங்கட் பிரபுவை விமர்சித்து வருகின்றனர். மறுபுறம் சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு மீம் போட்டு கலாய்த்துள்ளார். அதில் விஜய்யின் தோற்றத்தை பார்த்த அவர், பாவம் விஜய், மொக்கை டெக்னாலஜி என பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு பதிவில், விஜய்யின் டீ ஏஜிங் லுக்கை பார்த்ததும் அஜித் வெங்கட் பிரபுவுக்கு கைகொடுத்து கலக்கிட்டீங்க சகல என சொல்வது போன்ற மீமை ஷேர் பண்ணி இருக்கிறார்.
44
blue sattai maaran trolls vijay
இதையெல்லாம் விட அல்டிமேட் ட்ரோல் என்னவென்றால், வட இந்தியாவில் புகழ்பெற்ற டீக்கடை காரரான டோலி சாய் வாலாவின் புகைப்படத்தை பதிவிட்டு, 'அப்பா.. De aging பண்ண சொன்னா.. Dolly Chai wala வை வச்சி டூப் போட்ருக்காங்கப்பா' என்று பங்கமாக கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இப்படி விஜய்யின் டீ ஏஜிங் லுக்கிற்கு விமர்சனங்கள் அதிகளவில் குவிந்து வருவதால் படக்குழுவும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.