சித்தாவுக்கு குவிந்த விருதுகள்
அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தா திரைப்படத்துக்கு அதிகளவில் விருதுகள் கிடைத்தன. சித்தா படத்துக்கு கிடைத்த விருதுகளின் விவரம் இதோ...
சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருதை சித்தா வென்றுள்ளது.
சிறந்த நடிகர் (Critics) விருது சித்தா பட நாயகன் சித்தார்த்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை சித்தா படத்தின் கண்கள் ஏதோ பாடலை பாடிய கார்த்திகா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது சித்தா பட நாயகி நிமிஷா சஜயனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகைக்கான விருதை சித்தா படத்தில் நடித்த அஞ்சலி நாயர் வென்றார்.
சிறந்த இயக்குனருக்கான விருதை சித்தா பட இயக்குனர் அருண்குமார் வென்றுள்ளார்.
சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதும் சித்தா படத்துக்கு தான் கிடைத்தது. சந்தோஷ் நாராயணன் மற்றும் திபு நினன் தாமஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.