
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி 32-வருடங்களை கடந்த பின்னரும், உச்ச நடிகராக அஜித் உள்ளதே ஒரு மிகப்பெரிய சாதனை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இதை தாண்டி அஜித் யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளை செய்தவர்.
அஜித் முதல் முதலில் விளம்பரப் படங்களில் தான் நடிக்க துவங்கினார். தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே 'பிரேம புத்தகம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றார். இதன் பின்னரே தமிழில் அமராவதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நிலையான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அஜித் போராடி கொண்டிருந்த நிலையில், இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது இயக்குனர் வசந்த் இயக்கத்தில், 1995-ஆம் ஆண்டு வெளியான 'ஆசை' திரைப்படம்.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய சினிமா கேரியரில் ஏறுமுகத்தை சந்தித்தார் அஜித். அந்த வகையில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, தீனா, சிட்டிசன், வரலாறு, பில்லா, மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால், வேதாளம் உள்ளிட்ட பல படங்கள் இவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தன.
அஜித் 2003 முதல் 2005 வரை அதிகமான மோட்டார் பந்தய போட்டிகளில் கவனம் செலுத்தியதால் பல ஹிட் படங்களின் வாய்ப்பை தரவ விட நேர்ந்தது. குறிப்பாக சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்தார். இந்த படங்கள் அப்போது வெற்றியை தக்க வைக்க போராடி வந்த விக்ரம் - சூர்யா போன்ற நடிகர்களுக்கு கை கொடுத்தது. ஆனால் என்றுமே தான் மிஸ் செய்த படங்கள் பற்றி அஜித் கவலை பட்டதே இல்லை. அவர்களின் வெற்றியை கண்டு சந்தோச படுவார்.
32 ஆண்டுகள் தீரா சாதனைகளும்... ஆரா ரணங்களும்! ரத்தம் சொட்ட சொட்ட வெளியான 'விடாமுயற்சி' போஸ்டர்!
அஜித் பைக் ரேஸில் தீவிர கவனம் செலுத்திய போது, ஒருமுறை விபத்தில் சிக்கி அவரின் முதுகெலும்பில் அடிபட்டு, ஒரு வருடம் வரை படுக்கையில் இருந்து சிகிச்சை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு வழியாக அதில் இருந்து மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கிய போது, ஆரம்பம் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அனைவரிடமும் அன்பாக பழக கூடிய அஜித், பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.
இவரை அரசியலில் இழுக்க பலர் முயற்சி செய்த போதும்... தன்னுடைய அரசியல் கடமை வாக்கு செலுத்துவது மட்டுமே என்பதில் உறுதியாக உள்ளார். சின்ன உதவி செய்தால் கூட அதனை விளம்பர படுத்திக்கொள்பவர்கள் மத்தியில், சைலண்டாக பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை அஜித் செய்து வருகிறார்.
அதே போல் திரையுலகில் கவனம் செலுத்தும் பலர், சினிமா தொடர்பான பணிகளில் தான் தங்களை ஈடுபடுத்தி கொள்வார்கள். ஆனால் தல இந்த விஷயத்தில் கூட கொஞ்சம் மாறுபட்டவர் தான். நடிப்பை தவிர சினிமாவில் மற்ற துறைகளில் கவனம் செலுத்தாத அஜித், போட்டோ கிராஃபி, சமையல், ஆரோ மாடலிங் , ரிப்பில் ஷட்டிங் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆரோ மாடலிங்கில் சென்னை IIT மாணவர்களுக்கு மெண்டாராக இருந்து அவர்கள், தர்ஷா என்கிற டிரோன் செய்ய உதவினார். அதே போல் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதலிலும் கலந்து கொண்டு பல பதங்கங்களை வென்றார்.
தற்போது உலகம் சுற்றும் நாயகனாக மாறி, பைக் மூலம் உலகத்தை சுற்றி வர வேண்டும் என... நேரம் கிடைக்கும் போதெல்லாம், தன்னுடைய பைக் ரைடில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய அனுபவங்களை ஆர்வம் உள்ளவர்களும் அனுபவிக்க.. கூறிய விரைவில் இதற்கான நிறுவனம் ஒன்றையும் அஜித் நிறுவ முடிவு செய்துள்ளார். சினிமாவில் இருந்து கொண்டே இந்த 32 வருடத்தில் இப்படி பட்ட சாதனைகளை இவரை தவிர யாராலும் செய்ய முடியாது என்பதே உண்மை.