100 Days Game Show Bigg Boss
2017-ஆம் ஆண்டு முதல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த, உலக நாயகன் கமல்ஹாசன் 8-ஆவது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார். AI தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவுக்கு படிக்க சென்ற ஆண்டவர் அதை முடித்துவிட்டு வந்த கையேடு, தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே நேரம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
Kamal Hassan quit Bigg Boss Show
கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி அவருடைய ஸ்டைலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதற்கு, ஒருபுறம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும்... கமல்ஹாசன் அளவுக்கு இல்லை என்பதை சில பிரபலங்கள் உடைத்து கூறி வருகிறார்கள். அதே போல் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் பேசுவதற்கு வாய்ப்பளிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
அமர்க்களம் லுக்கில்அஜித்; கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படத்தை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆதிக்!
Vijay Sethupathi Hosting Bigg Boss Tamil Season 8
இந்த முறை பிக்பாஸ் வீட்டில் உள்ளே முதல் நாளே 18 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், பின்னர் வைட்டு கார்டு மூலம், 6 போட்டியாளர்கள் சென்றனர். இதனால் நாட்கள் குறைவாக இருந்த போதிலும் ஆட்களின் எண்ணிக்கை பிக்பாஸ் வீட்டில் அதிகமாக இருந்தது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருந்த நிலையில், அவர்களில் இருந்து சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தியை எலிமினேட் செய்து 15 போட்டியாளர்களாக மாற்றிய பிக்பாஸ்... தற்போது இந்த வாரமும் இரண்டு விக்கெட்டை காலி செய்துள்ளார்.
Tharshika and Sathya Salary
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்த நிலையில், 70 நாட்கள் விளையாடியதற்கு ரூ.14 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். அதே போல் மற்றொரு போட்டியாளரான, தர்ஷிகா ரூ.15,000 சம்பளமாக பெற்றதாக கூறப்பட்ட நிலையில் 10 லட்சத்து 50 ஆயிரம் சம்பளத்துடன் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.