கடந்த வாரம் இருவர் வெளியேறியதால், மீதம் தீபக், கானா ஜெஃப்ரி, ரஞ்சித், பவித்ரா, ஜனனி, சத்யா, தர்ஷிகா, அன்ஷிதா, வி.ஜே.விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, உள்ளிட்ட 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டின் உள்ளே விளையாடி வந்தனர். மேலும் இந்த வாரம மிட் வீக் எவிக்ஷன் ஒன்றை நடத்தி பிக்பாஸ் ஒரு போட்டியாளரை வெளியேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் முழுவதும் அப்படி எதுவும் நடைபெறாத நிலையில், நேற்றைய தினம் நடிகர் சத்யா மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்கிற தகவல் வெளியானது. ஆனால் இந்த வாரமும் 15 போட்டியாளர்களை 13 போட்டியாளராக மாற்றி உள்ளார் பிக்பாஸ். அதன்படி இரண்டாவது போட்டியாளராக காதல் கன்டென்ட் கொடுத்து வந்த நடிகை தர்ஷிகா தான் வெளியேறி உள்ளார்.