சும்மாவே இருந்தது போதும் வெளிய வாங்க; விஜய் சேதுபதி எலிமினேட் செய்த அந்த நபர் இவரா?

Published : Dec 14, 2024, 03:51 PM IST

Bigg Boss Elimination : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷனில் வெளியேறிய போட்டியாளர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்,

PREV
14
சும்மாவே இருந்தது போதும் வெளிய வாங்க; விஜய் சேதுபதி எலிமினேட் செய்த அந்த நபர் இவரா?
Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் தற்போது முத்துக்குமரன், அருண், சத்யா, விஷால், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், தீபக், மஞ்சரி, ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா, அன்ஷிதா, தர்ஷிகா ஆகிய 15 போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே தான் பிக் பாஸ் டைட்டுலுக்கான கடுமையான போட்டி நிலவி வருகின்றது. 

24
Bigg Boss Vijay Sethupathi

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் ட்விஸ்டுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் இந்த சீசனில் முதல் 8 வாரம் சிங்கிள் எவிக்‌ஷன் மட்டுமே நடந்து வந்த நிலையில், 9-வது வார இறுதியில் டபுள் எவிக்‌ஷன் என அறிவித்து அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்தடுத்து சாச்சனா மற்றும் ஆர்.ஜே.ஆனந்தியை எலிமினேட் செய்தார். அதேபோல் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் என கூறப்பட்டதோடு, மிட் வீக் எவிக்‌ஷன் நடக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... விஜய் போனா என்ன; அடுத்த தளபதியாக சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் சரவண விக்ரம்!

34
Bigg Boss Elimination

ஆனால் மிட் வீக் எவிக்‌ஷன் நடைபெறாத நிலையில், இந்த வாரம் வீக் எண்டு எபிசோடு தொடங்கியதுமே எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக விஜய் சேதுபதி சொன்னதும் அனைவரும் வாயடைத்துப் போயினர். இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என ரசிகர்களும் காத்திருக்க, சட்டென தனது ஓவர் கோர்டில் இருந்து எவிக்‌ஷனாகப்போகும் போட்டியாளரின் பெயர் அடங்கிய கார்டை எடுத்து நீட்டினார் விஜய் சேதுபதி.

44
Sathya Eliminated this week

அதில் இந்த வாரம் மக்கள் அளித்த வாக்குகளில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளரான சத்யாவின் பெயர் இடம்பெற்று இருந்தது. இதனால் இந்த வார எபிசோடு தொடங்கிய கையோடு சத்யாவை எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பினார் விஜய் சேதுபதி. இந்த சீசனில் எதுவுமே செய்யாமல் இத்தனை நாட்களை எப்படி கடந்தேன் என தனக்கே ஆச்சர்யமாக இருப்பதாக சத்யாவே கடந்த வாரம் கூறி இருந்த நிலையில், அவர் சும்மா இருந்தது போதும் என முடிவெடுத்து அவரை எலிமினேட் செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் மற்றும் நடிகை சோபியா விவாகரத்து!

click me!

Recommended Stories