ஜாமீனில் விடுதலையான கையோடு பரபரக்க வந்து அல்லு அர்ஜுன் அளித்த பேட்டி - என்ன சொன்னார்?

Published : Dec 14, 2024, 03:18 PM IST

Allu Arjun Press Meet : அல்லு அர்ஜுன் இன்று சிறையில் இருந்து விடுதலையாகி வீடு திரும்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.  

PREV
14
ஜாமீனில் விடுதலையான கையோடு பரபரக்க வந்து அல்லு அர்ஜுன் அளித்த பேட்டி - என்ன சொன்னார்?
Allu Arjun

புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சி திரையிடப்பட்டபோது, சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து தெலுங்கானா காவல்துறை குற்றவியல் வழக்கு பதிவு செய்து அதில் அல்லு அர்ஜுனின் பெயரை 11வது நபராகச் சேர்த்தனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்தது. இதனால் அவருக்கு இடைக்கால ஜாமீன் பெற அல்லு அர்ஜுன் தரப்பு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். 

24
Telugu Hero Allu Arjun

அவரது வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனால் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஜாமீன் கிடைத்தாலும் அல்லு அர்ஜுன், ஒரு நாள் இரவு சஞ்சல்குடா சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில். உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே.. கீழ் நீதிமன்றத் தீர்ப்பின்படி அல்லு அர்ஜுனை சஞ்சல்குடா சிறைக்கு மாற்றினர். நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும் அதன் உத்தரவு நகல் முறைப்படி சிறை அதிகாரிகளுக்குச் செல்ல வேண்டும். அந்த நகல் சரியான நேரத்தில் வரவில்லை எனக் கூறி அல்லு அர்ஜுனை சிறையில் வைத்தனர்.

இதையும் படியுங்கள்... இரவு முழுவதும் தரையில் தூங்கிய புஷ்பா 2 ஸ்டார்: ஒருநாள் சிறை வாசத்துக்கு பிறகு ரிலீஸான அல்லு அர்ஜூன்!

34
Allu Arjun Released from Jail

நேற்று இரவு முழுக்க சிறையில் இருந்த அல்லு அர்ஜுன், இன்று காலை விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு அல்லு அர்ஜுன் அருகிலுள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று அங்கு தன் மனைவி ஸ்நேகா ரெட்டி மற்றும் குழந்தைகளை சந்தித்துவிட்டு, பின்னர் அல்லு அர்ஜுன் நேராக கீதா ஆர்ட்ஸ் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தில் ராஜு உட்பட சில திரைப்பட பிரபலங்களை சந்தித்துவிட்டு நேராக அல்லு அர்ஜுன் தனது இல்லத்திற்குச் சென்றார்.

44
Allu Arjun Press Meet

அல்லு அர்ஜுன் தன் இல்லத்தின் முன் குவிந்திருந்த செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரேவதியின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. நான் நலமாக இருக்கிறேன். கவலைப்படத் தேவையில்லை. இது எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கடினமான நேரம். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ரேவதி குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வேன். என்ன செய்தாலும் ஒருவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது. கடந்த 20 வருடங்களாக பட ரிலீசின் போது தியேட்டருக்கு சென்று வருகிறேன். ஒருபோதும் இதுபோல் நடந்ததில்லை. தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் நான் எதுவும் பேச முடியாது. எனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி” என கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... கைது செய்யப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் – குஷியில் ரசிகர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories