புஷ்பா 2-வை விட அதிக வசூலா? சூது கவ்வும் 2 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்!!

First Published | Dec 14, 2024, 1:29 PM IST

Soodhu Kavvum 2 Box Office : மிர்ச்சி சிவா நடிப்பில் திரைக்கு வந்துள்ள சூது கவ்வும் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Soodhu Kavvum 2 vs Pushpa 2

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை மாஸ் ஹீரோவாக உயர்த்திய படம் என்றால் அது சூது கவ்வும் தான். அப்படத்திற்கு முன்னர் வரை தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதியை ஒரு கெத்தான ரோலில் காட்டிய படம் சூது கவ்வும். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கினார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

soodhu kavvum 2

சூது கவ்வும் படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த அப்படத்தின் தயாரிப்பாளர் சிவி குமார், அதில் மிர்ச்சி சிவாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். இப்படத்தை புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கி உள்ளார். கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திலும் கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... அடிக்குற மழைக்கு வீட்டிலேயே டைம்பாஸ் பண்ண; இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் வருதா?

Tap to resize

soodhu kavvum 2 Mirchi Siva

அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 படம் தமிழ்நாட்டிலும் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக சூது கவ்வும் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனாலும், தற்போது தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கி வருவதால் சூது கவ்வும் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் வெறும் ரூ.45 லட்சம் மட்டுமே வசூலித்து உள்ளதாம். புஷ்பா 2 படத்தின் நேற்றைய வசூலை விட இது மிகவும் கம்மி.

soodhu kavvum 2 Box Office

புஷ்பா 2 திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.35 கோடி வசூலித்து இருந்தது. ஆனால் சூது கவ்வும் 2 திரைப்படம் அதில் பாதிகூட வசூலிக்கவில்லை. இருப்பினும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரு நாட்களில் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு போட்டியாக வெளியான நடிகர் சித்தார்த்தின் மிஸ் யூ திரைப்படமும் நேற்று வசூலில் பயங்கர் அடி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 2024 இன் சிறந்த 5 வெப் சீரிஸ்: மிஸ் பண்ணிடாதீங்க!

Latest Videos

click me!