Saravana Vickram debut as Hero : பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான சரவண விக்ரம் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம் இருந்தாலும் அவர்களில் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை எட்டியவர்கள் ஒரு சிலரே. குறிப்பாக பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த லப்பர் பந்து திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.
24
Bigg Boss Fame saravana vickram
அதேபோல் பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ், தற்போது தமிழ் சினிமாவில் சில்லனாக கலக்கி வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் இவருக்கு கைகொடுக்காததால், உதயநிதியின் கலகத் தலைவன் படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார் ஆரவ். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.
இதைத் தொடர்ந்து பிக் பாஸ் மூலம் பேமஸ் ஆன ஹீரோ என்றால் அது கவின் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். டாடா படத்தின் வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள கவின் தற்போது கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். இதில் நயன்தாராவுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கவின். இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் புகழ் அடைந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.
44
Saravana Vickram Debut Movie
அந்த வரிசையில் இணையும் முனைப்போடு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார் சரவண விக்ரம். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னைத் தானே டைட்டில் வின்னர் என சொல்லிக்கொண்டதால் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அவர் ஹீரோவாக நடிக்க உள்ள முதல் படத்தை பிரவீன் கே மணி என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஹசிலி என்பவர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இன்ஸ்டாவில் தளபதி விஜய் போல் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடும் சரவண விக்ரம் அடுத்த தளபதியாக உருவெடுக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.