பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, கடந்த 2012-ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த தோனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்த அவர், அடுத்ததாக பா.இரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதையடுத்து இந்தியில் பிசியானதால் தமிழ் சினிமா பக்கம் அவர் தலைகாட்டவே இல்லை.