Sneha
புன்னகை அரசி சினேகா
மலையாள படம் மூலம் அறிமுகமான சினேகாவுக்கு அடையாளம் கொடுத்தது தமிழ் சினிமா தான். இவர் தமிழில் கடந்த 2000-ம் ஆண்டு வெளிவந்த என்னவளே படம் மூலம் அறிமுகமானாலும் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்த படம் ஆனந்தம் தான். லிங்குசாமி இயக்கிய இப்படத்தில் நடிகர் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இப்படத்தில் ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ என்கிற ஒற்றை பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் சினேகா.
Actress Sneha
டாப் ஹீரோயின்
ஆனந்தம் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யுடன் வசீகரா, சூர்யா ஜோடியாக உன்னை நினைத்து, கமலுடன் பம்மல் கே சம்மந்தம் மற்றும் வசூல் ராஜா எம்பிபிஎஸ், என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே நட்சத்திர நாயகியாக வலம் வந்தார் சினேகா. அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் சினேகா திகழ்ந்து வந்தார்.
Sneha Prasanna kids
சினிமாவுக்கு முழுக்கு
திருமணத்துக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்டார் சினேகா. இந்த ஜோடிக்கு கடந்த 2015-ம் ஆண்டு விஹான் என்கிற ஆண் குழந்தை பிறந்தது. மகன் பிறந்த சில ஆண்டுகளில் மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்து சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், தனுஷ் ஜோடியாக பட்டாசு ஆகிய படங்களில் நடித்த சினேகா பின்னர் மீண்டும் கர்ப்பமாகி 2020-ம் ஆண்டு ஆத்யந்தா என்கிற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
Sneha Net Worth
சினேகா - பிரசன்னா சம்பளம்
நடிகை சினேகா அண்மையில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருந்தது. அதேபோல் பிரசன்னா சமீப காலமாக ஹீரோவாக நடிக்காவிட்டாலும் அவருக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. தற்போது அஜித்துக்கு வில்லனாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறார். இவரும் ஒரு கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.