த்ரிஷா 22 ஆண்டுகள் நிறைவு – த்ரிஷாவிற்கு சைலண்டா டிரீட் கொடுத்த சூர்யா 45 அண்ட் டீம்!

First Published | Dec 14, 2024, 12:02 AM IST

Trisha Krishnan Join With Suriya 45 Movie Team : த்ரிஷா சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் சூர்யா 45 படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Trisha Join With Suriya 45 Movie Team

Trisha Krishnan Join With Suriya 45 Movie Team : இயக்குநர் சிவா மற்றும் நடிகர் சூர்யா காம்பினேஷனில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஓவர் பில்டப்புகளுடன் திரைக்கு வந்த கங்குவா படம் முதல் நாள் முதல் ஷோவிலேயே ரசிகர்களிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

Trisha Suriya on 45 Movie

அதன் பிறகு நாளுக்கு நாள் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களையே கங்குவா பெற்று வந்தது. கங்குவா வெளியீட்டுவிற்கு முன்னதாக ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து பேசிய நடிகர் சூர்யா படம் வெளியான பிறகு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Tap to resize

Trisha Join With Actor Suriya

ஆனால், ஜோதிகா தான் வாய கொடுத்து மாட்டிக் கொண்டார். அதன் பிறகு ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் கோயில் கோயிலாக சென்று வந்தனர். கிட்டத்தட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா உலகம் முழுவதும் வெளியான நிலையில் மொத்தமாக ரூ.106 கோடி வரையில் வசூல் குவித்து மோசமான சாதனையை படைத்துள்ளது.

Trisha Join With Suriya 45 Movie

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 45ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. கோவையில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் வைத்து பட பூஜை நடைபெற்றது.

Trisha Krishnan Tamil Cinema

சூர்யா 45 படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் படத்திலிருந்து ஏ ஆர் ரஹ்மான் விலகினார். அதன் பிறகு சாய் அபயன்கர் புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Trisha Filmography

இன்று த்ரிஷா அறிவிக்கப்பட்டதற்கு ஒரு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதாவது, த்ரிஷா சினிமாவிற்கு வந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அதனை சிறப்பிக்கும் வகையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் த்ரிஷா நன்றி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் டிரீம் வாரியர்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனம் த்ரிஷாவை அதிகாரப்பூர்வாக சூர்யா 45 படத்தில் இணைத்துக் கொண்டுள்ளது.

Trisha Krishanan

இதற்கு முன்னதாக சூர்யா மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து மௌனம் பேசியதே, ஆயுத எழுத்து மற்றும் ஆறு படங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது 4ஆவது முறையாக சூர்யா 45 படத்தின் மூலமாக இணைந்துள்ளனர். ஏற்கனவே லப்பர் பந்து நடிகை சுவாஸிகா சூர்யா 45 படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!