என்னோட அம்மா எனக்கு 2 விஷயங்கள் சொல்லி கொடுத்தாங்க – கீர்த்தி சுரேஷ்!

Published : Dec 13, 2024, 09:21 PM IST

Keerthy Suresh Talk 2 Things about Cinema : தன்னோட அம்மா 2 விஷயங்களை சொல்லி கொடுத்தாங்க என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

PREV
15
என்னோட அம்மா எனக்கு 2 விஷயங்கள் சொல்லி கொடுத்தாங்க – கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh, Keerthy Suresh Wedding Photos

Keerthy Suresh Talk 2 Things about Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகளின் இவரும் ஒருவர் தான். தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினிமுருகன் படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன் பிறகு மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

25
Keerthy Suresh Mother, Keerthy Suresh First Movies, Keerthy Suresh Net Worth

விஜய், ரஜினிகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார். மேலும், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னிவெடி ஆகிய 2 படங்கள் உருவாகி வருகிறது. இந்த 2 படங்களுமே வரும் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.

35
Keerthy Suresh Mother, Keerthy Suresh First Movies, Keerthy Suresh Net Worth

இந்த நிலையில் தான் கடந்த 15 ஆண்டு காலமாக காதலித்து வந்த நீண்டகால நண்பரான ஆண்டனி தட்டிலை நேற்று திருமணம் செய்து கொண்டார். கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டில் திருமணம் கோவாவில் தமிழ் பிராமண முறைப்படி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் விஜய் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

45
Keerthy Suresh Filmography, Keethy Suresh Antony Thattil Wedding

இந்த நிலையில் தான் ஹீரோயினாக கிட்டத்தட்ட 11 ஆண்டுகாலமாக சினிமாவில் கால் பதித்து வரும் நிலையில் இத்தனை ஆண்டுகால ரகசியம் குறித்து கூறியிருக்கிறார். சினிமாவில் நடிக்க என்னுடைய அம்மா 2 விஷயங்களை தான் சொல்லிக் கொடுத்தாங்க. அதாவது கீதாஞ்சலி படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது 2 வார்த்தைகள் மட்டும் தான் என்னுடைய அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

55
Keerthy Suresh, Keerthy Suresh Wedding Photos

அதில் முக்கியமானது நேரம். ஷூட்டிங்கிற்கு டைமுக்கு வரணும், போகனும். 2ஆவது விஷயம், யூனிட்டில் இருக்கும் எல்லாரையும் சரிசமமாக பார்க்கணும். கீதாஞ்சலி படத்துல ஆரம்பிச்சு இப்போ வரைக்கும் இந்த 2 விஷயங்களைத் தான் நான் பாலோ பண்ணுகிறேன் என்று கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories