ஆனாலும் இரு தரப்பு ரசிகர்ளும் மோதுவதை நிறுத்தவில்லை. ரஜினி படத்தை விஜய் ரசிகர்களும், விஜய் படத்தை ரஜினி ரசிகர்களும் கிண்டல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படி இரண்டு ரசிகர்களும் பாம்பும், கீரியுமாக இருந்து வரும் நிலையில், ரஜினி 'அன்புத்தம்பி விஜய்' என கூறியிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் இதை சிலாகித்து வருகின்றனர். ஐயா திரைப்படத்தில் ஹூரோ சரத்குமார், வில்லன் பிரகாஷ்ராஜை பார்த்து, ''நான் எப்போதும் உன்னை எதிரியாக பார்த்தது இல்லை. என் அண்ணணாகத்தான் பார்க்கிறேன்''என்று கூறுவார்.
இந்த காட்சியை வைத்து விஜய் ரசிகர்கள் போஸ்ட் போட்டு வருகின்றனர். மறுபக்கம் ரஜினி ரசிகர்கள், ''தனக்கு எதிராக யார் என்ன செய்தாலும், பேசினாலும் அதை மனதில் போட்டுக் கொள்ளாமல் அன்பை வெளிப்படுத்துவதே ரஜினியின் பண்பு. அண்மையில் ரஜினியை சீமான் சந்தித்ததும், பாமகவின் அன்புமணி மகள் தயாரிக்கும் படத்தின் டிரெய்லரை ரஜினி வெளியிட்டதுமே இதற்கு சாட்சி'' என கூறி வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் கைதுக்குப் பின்னால் அரசியல் பழிவாங்கலா? கே.டி.ஆர் ட்வீட் சர்ச்சை?