
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் கைது இப்போது தெலுங்கானா மற்றும் ஆதிரா என இரண்டு மாநில மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. `புஷ்பா 2` படத்தின் மூலம் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ள அல்லு அர்ஜுன். இப்படி கைது செய்யப்பட்டிருப்பது யாரும் துளியும் எதிர்பார்த்திடாத ஒரு சம்பவம் எனலாம்.
அல்லு அர்ஜுன் நடித்த `புஷ்பா 2` திரைப்படம் வெளியாகும் முதல் நாள் (டிசம்பர் 4 இரவு) ரசிகர்களுக்காக ப்ரீமியர் காட்சி திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது . ஆர்டிசி எக்ஸ் ரோட்டில் உள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்ட படத்தை பார்க்க வந்தவர்களை விட, அல்லு அர்ஜுன் படம் பார்க்க வருவதாக வெளியான செய்தியால் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கு முன் குவிந்தனர்.
ரேணுகா சுவாமி கொலை வழக்கு; நடிகர் தர்ஷன் உட்பட 7 பேருக்கு ஜாமீன்!
இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, அல்லு அர்ஜுனை பார்க்க திரையரங்கம் வந்த பெண் உயிரிழந்தார். அவருடன் வந்த அவரின் மகனும் தற்போது உயிருக்குப் போராடி வருகிறார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்தார் அல்லு அர்ஜுன். அதே போல் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம் என வீடியோ வெளியிட்டு அறிவித்தார்.
இதுகுறித்து உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரில், தனது மனைவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சிக்கடபள்ளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார். இதில் அல்லு அர்ஜுனின் பெயரையும் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏற்கனவே சந்தியா திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளரைக் கைது கைது செய்த நிலையில், இன்று காலை அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
பிறந்தநாளுக்கு வாழ்த்து; சூப்பர் ஸ்டார் வெளியிட்ட நன்றி அறிக்கை!
மருத்துவப் பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் . பின்னர், நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இதனுடன், தனது கைதை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது அல்லு அர்ஜுனுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்த விதம் விவாதப் பொருளாக மாறி வருகிறது. பல சந்தேகங்களுக்கும் இடமளிக்கிறது. அல்லு அர்ஜுன் கைது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தான் தலையிடப் போவதில்லை என்றும், சட்டம் தனது வேலையைச் செய்யும் என்றும் கூறியுள்ளார்.
மறுபுறம் கே.டி.ஆர் தேசிய விருது பெற்ற நட்சத்திரம் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது ஆளும் கட்சியின் பாதுகாப்பின்மைக்கு எடுத்துக்காட்டு என்றார். கூட்ட நெரிசல் பாதிக்கப்பட்டவர்கள் மீது எனக்கு முழு அனுதாபம் உள்ளது, ஆனால் உண்மையில் தோல்வியடைந்தது யார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அல்லு அர்ஜுனை ஒரு சாதாரண குற்றவாளியாக, அவர் நேரடியாகப் பொறுப்பேற்காத ஒரு விஷயத்திற்காகக் கைது செய்வது எந்த அளவுக்குச் சரி என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் நடவடிக்கையை அவர் கண்டித்துள்ளார். அதே நேரத்தில், அதே தர்க்கத்தின்படி, ஹைதராபாத்தில் ஹைட்ரா ஏற்படுத்திய பயத்தால் இரண்டு அப்பாவிகள் உயிரிழந்தனர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் மற்றும் நடிகை சோபியா விவாகரத்து!
அவர்களின் மரணத்திற்குக் காரணமான முதல்வர் ரேவந்த் ரெட்டியையும் கைது செய்ய வேண்டும் என்று அவர் ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.