அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் – ஹைதராபாத் கோர்ட் அதிரடி உத்தரவு!

First Published | Dec 13, 2024, 6:03 PM IST

Allu Arjun 14 day Judicial Custody : புஷ்பா 2 படத்தின் போது ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Allu Arjun 14 day Judicial Custody

Allu Arjun 14 day Judicial Custody : அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவான புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

Hyderabad, Sandhya Theatre, Women Revathi Death News

அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த புஷ்பா 2 படத்திற்கு ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடினர். மேலும், அந்த திரையரங்கில் ஓபனிங் ஷோ பார்க்க அல்லு அர்ஜூன் வருகை தந்துள்ளார். அவரை காண்பதற்கும் அதிகமான ரசிகர்கள் கூடினர்.

Tap to resize

Allu Arjun Arrest

இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி (39) என்ற பெண் தன்னுடைய கணவர் பாஸ்கர் மற்றும் குழந்தைகள் தேஜ் (9) மற்றும் சான்வி (7) ஆகியோருடன் ஆர்டிசி சாலையில் உள்ள சந்தியா தியேட்டருக்கு புஷ்பா 2 படம் பார்க்க வருகை தந்துள்ளார்.

Pushpa 2 The Rule Allu Arjun

அவர் கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அல்லு அர்ஜூன், தியேட்டர் மேனேஜ்மெண்ட் மற்றும் பாதுகாப்பு டீம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Allu Arjun, Rashmika Mandannaa, Complaint Against Pushpa 2 Actor Allu Arjun

இந்த நிலையில் தான் ஒரு வாரத்திற்கு பிறகு அல்லு அஜூனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அல்லு அர்ஜூன் மீது பிஎன்எஸ் சட்டப்படி 105, 118(1)r/w3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சிக்காட்பள்ளி போலீசார் அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.

Hyderabad, Sandhya Theatre, Women Revathi Death News

போலீசார் வீட்டிற்கு வந்து வெளியில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் ஹாயாக டீ கொடுத்து விட்டு அதன் பிறகு தான் போலீஸ் வாகனத்தில் ஏறி வந்துள்ளார். கைதுக்கு முன்னதாக அல்லு அர்ஜூன் மனைவி சினேகா ரெட்டியை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு சென்றார்.

Pushpa 2 The Rule, Police Complaint Against Allu Arjun

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest Videos

click me!