ரேணுகா சுவாமி கொலை வழக்கு; நடிகர் தர்ஷன் உட்பட 7 பேருக்கு ஜாமீன்!

First Published | Dec 13, 2024, 5:21 PM IST

கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சுவாமி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷன் உட்பட 7 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
 

Kannada Actor Dharshan

தன்னுடைய ரசிகரையே கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் தர்ஷனுக்கு, ,மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
 

Dakshan Thoogudeepa involved Renukaswamy Murder

சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, முதுகு வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக 6 வாரங்கள் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார் நடிகர் தர்ஷன் தூகுதீபா. இவருடன் இன்னும் 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Tap to resize

Dakshan Thoogudeepa Arrested

ரேணுகா சுவாமி கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நடிகர் தர்ஷன் தூகுதீபாவை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 6 மாதங்களாக பெங்களூரு சிறையில் இருக்கும் இவருக்கு, சில ரவுடிகள் விருந்து வைத்ததாக வெளியான வீடியோவை தொடர்ந்து, அவர் பெங்களூர் சிறையில் இருந்து பல்லாரி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 

பிறந்தநாளுக்கு வாழ்த்து; சூப்பர் ஸ்டார் வெளியிட்ட நன்றி அறிக்கை!
 

Dakshan Thoogudeepa Affair with Pavitra Gowda

ஆனால், பல்லாரி சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என கூறப்படுகிறது. தரையில் அமர்ந்து, தரையில் படுத்து, இந்தியன் கழிவறையைப் பயன்படுத்தியதால், 6 அடி உயரமுள்ள தர்ஷனுக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டதாகவும், இது நாளடைவில் முதுகெலும்பில் கடுமையான வலியை ஏற்படுத்தியதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறி 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார்.
 

Dakshan Thoogudeepa and 7 Accused Get Bail

இதை தொடர்ந்து அவரின் மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்த பின்னர் நீதிபதி, நடிகர் தர்ஷனுக்கு 6 வார காலம், மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பவித்ரா கவுடா, தர்ஷன், நாகராஜ், லட்சுமண், அனுகுமார், ஜெகதீஷ் மற்றும் பிரதூஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.எனவே இன்று அல்லது நாளை அவர்கள் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீன் மூலம் வெளியே வருவார்கள் என தெரிகிறது. 

ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் மற்றும் நடிகை சோபியா விவாகரத்து!
 

Latest Videos

click me!