Actor Manikandan Rajesh
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்குள் நுழைந்தாரோ அதே போல், கடினமான சூழல்களை கடந்த சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பை பெற்றவர் தான் மணிகண்டன் ராஜேஷ்.
Aishwarya Rajesh Brother Manikandan
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மணிகண்டனின் தந்தை, ஒரு தெலுங்கு நடிகர். தன்னுடைய குழந்தைகள் அனைவரும் சிறியவர்களாக இருக்கும் போதே உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அதன் பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயார் தான், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார். ஐஸ்வர்யா - மணிகண்டன் இருவருமே கல்லூரியில் படித்து கொண்டு, பார்ட் டைம்மாக வேலை பார்த்து தான் தங்களின் கல்லூரி செலவை கூட பார்த்து கொண்டனர்.
தளபதி உடன் தனி விமானத்தில் சென்ற த்ரிஷா - லீக்கான புகைப்படங்கள்!
Manikandan Rajesh and Sofia Couple
அதே போல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடிய போதுதான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஒரு தொகுப்பாளராகவும் அறியப்பட்ட இவர் சினிமாவில் சில வாய்ப்புகள் தேட துவங்கினார். மணிகண்டன் ராஜேஷ், சின்னத்திரையில் தொடர்ந்து பயணிக்க துவங்கிய நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான அவள் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
Bigg Boss Manikandan Rajesh Serial
இதை தொடர்ந்து, அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார், உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். வெள்ளித்திரையில் சில படங்களில் தலை காட்டினாலும் தன்னுடைய தங்கைபோல் நிலையான இடத்தை இவரால் பிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினாலும், டைட்டிலை கைப்பற்ற முடியவில்லை.
மணிகண்டன் ராஜேஷ், தன்னுடன் நடித்த நடிகை சோபியாவையே காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு, ஆர்யன் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். கணவன் மனைவி இருவருமே பிரபலம் என்பதால், மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பின்னர் பர்சனல் விஷயம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்தும் விலகினர்.
இந்த வாரம் புஷ்பா 2-வை காலி பண்ண களம் இறங்கும் 7 திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?
Sofia and Manikandan Divorced
மணிகண்டனை திருமணம் செய்து கொண்ட பின்னர், குழந்தையை வளர்க்க திரையுலகில் இருந்து மொத்தமாக விலகி இருந்த சோபியா, மீண்டும் தற்போது திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் ஹாட்ஸ்பாட் திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக சோபியா நடித்திருந்த நிலையில், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மணிகண்டன் மற்றும் சோபியா தம்பதி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும், தற்போது வரை மணிகண்டன் மற்றும் சோபியா ஜோடி இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.