அடிக்குற மழைக்கு வீட்டிலேயே டைம்பாஸ் பண்ண; இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் வருதா?

Published : Dec 13, 2024, 03:18 PM IST

This Week OTT Release Movies : தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், வீட்டில் இருந்தே சில் பண்ண இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
14
அடிக்குற மழைக்கு வீட்டிலேயே டைம்பாஸ் பண்ண; இந்த வாரம் ஓடிடியில் இத்தனை படங்கள் வருதா?
OTT Release Movies on December 13

தமிழகத்தில் தற்போது மழை வெளுத்து வாங்கி வருவதால் புதுப்படங்கள் தியேட்டர் வெளியீட்டை தள்ளிவைத்து வருகின்றன. ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரிலீஸ் ஆக இருந்த மழையில் நனைகிறேன் திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது. இதுதவிர இன்று ரிலீஸ் ஆன சூதுகவ்வும் 2, மிஸ் யூ போன்ற படங்களுக்கும் பெரியளவில் கூட்டம் வரவில்லை. இதனால் மக்கள் வீட்டில் இருந்து கண்டு ரசிக்க இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

24
Thangalaan ott release

தங்கலான்

பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்த படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ஓடிடியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், இந்த வாரம் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

இதையும் படியுங்கள்... இந்த வாரம் புஷ்பா 2-வை காலி பண்ண களம் இறங்கும் 7 திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

34
7G The Dark Story

7ஜி தி டார்க் ஸ்டோரி

ஹரூன் இயக்கத்தில் சோனியா அகர்வால் கதையின் நாயகியாக நடித்த படம் 7ஜி தி டார்க் ஸ்டோரி. இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சினேகா குப்தா, சித்தார்த் விபின், சுப்ரமணியம் சிவா, கல்கி ராஜா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் இன்று முதல் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

44
Singham Again ott release

மற்ற மொழி படங்கள்

மலையாளத்தில் போகன்வில்லா திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்திலும், சுருள், சாமா ஆகிய படங்கள் CSpace ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது. தெலுங்கில் ஹரிகதா வெப் தொடர் ஹாட்ஸ்டாரிலும், ரோட்டி கப்டா ரொமான்ஸ் Etv Win ஓடிடி தளத்திலும் ஸ்டிரீம் ஆகிறது. அதேபோல் இந்தியில் டெஸ்பேட்ஜ் ஜீ5 ஓடிடி தளத்திலும், சிங்கம் அகைன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. ஆங்கிலத்தில் ரெட் ஒன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. அதேபோல் இன்விசிபில் என்கிற டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. 

இதையும் படியுங்கள்... 300 கோடிக்கு மேல் சம்பளம்; அல்லு அர்ஜுன் இல்ல; அதிக சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தானாம்!!

click me!

Recommended Stories