கைது செய்யப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் – குஷியில் ரசிகர்கள்!

First Published | Dec 13, 2024, 7:21 PM IST

Pushpa 2 Actor Allu Arjun Interim Bail : ரேவதி என்ற பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Pushpa 2 The Rule Allu Arjun

Pushpa 2 Actor Allu Arjun Interim Bail : அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. புஷ்பா 2 வெளியாகி 8 நாட்கள் கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.1105 கோடி வசூல் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Rashmika Mandannaa, Complaint Against Pushpa 2 Actor Allu Arjun

ஏற்கனவே படம் வெளியீட்டிற்கு முன்னதாக ரூ.1085 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருந்தது. இந்த நிலையில் தான் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ஹைதராபாத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Pushpa 2 The Rule Allu Arjun

ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை காட்சி பார்க்க வந்த ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Allu Arjun Arrest, Allu Arjun Bail, Pushpa 2 Actor Allu Arjun Interim Bail

இந்த நிலையில், ரேவதி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து ஹைதராபாத் போலீசார் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தான் இன்று அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Pushpa 2 Actor Allu Arjun Interim Bail

இதைத் தொடர்ந்து அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர், சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு சிறிது நேரத்திற்குள்ளாக அல்லு அர்ஜூனுக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Pushpa 2 The Rule, Police Complaint Against Allu Arjun

அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டது குறித்து ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் பார்ப்பதை என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. எல்லா சம்பவத்திற்கும் தனி நபரை குற்றம் சாட்டுவது வருத்தமளிக்கிறது. இந்த சூழ்நிலை நம்ப முடியாதது. இதயத்தை உடைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!