விஜய்யுடன் கோவா ட்ரிப் முடித்து வந்த திரிஷாவுக்கு நடிகர் சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

First Published | Dec 14, 2024, 2:41 PM IST

22 years of Trisha : திரையுலகில் ஹீரோயினாக 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை திரிஷாவுக்கு சூர்யா 45 படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

Suriya 45 Team

சூர்யா நடித்த மெளனம் பேசியதே படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. அன்று தொடங்கிய அவரது திரைப்பயணம் இன்று வரை கொடிகட்டிப் பறக்கிறது. தற்போது திரிஷாவுக்கு வயது 40க்கு மேல் ஆனாலும் தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ள ஹீரோயின் அவர்தான். அதுமட்டுமின்றி அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினும் திரிஷா தான். அவர் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.

Suriya, Trisha

நடிகை திரிஷா கைவசம் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும் மலையாளத்தில் ஐடெண்டிடி, தெலுங்கில் விஸ்வம்பரா ஆகிய படங்களும் உள்ளன. இதோடு லேட்டஸ்டாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆனார்.

இதையும் படியுங்கள்... த்ரிஷா 22 ஆண்டுகள் நிறைவு – த்ரிஷாவிற்கு சைலண்டா டிரீட் கொடுத்த சூர்யா 45 அண்ட் டீம்!

Tap to resize

22 years of Trisha

சூர்யாவுடன் மெளனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா தற்போது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ஜிகே விஷ்ணு கவனிக்க, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவாட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

Suriya 45 team celebrate trisha

அண்மையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக தன்னுடைய நண்பரும், நடிகருமான தளபதி விஜய் உடன் தனி விமானத்தில் கோவா சென்றிருந்த திரிஷா, அங்கிருந்து நேரடியாக கோவைக்கு சென்று சூர்யா 45 படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த திரிஷாவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சூர்யா, அவர் திரையுலகில் 22 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை படக்குழுவோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... தளபதி உடன் தனி விமானத்தில் சென்ற த்ரிஷா - லீக்கான புகைப்படங்கள்!

Latest Videos

click me!